பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 மயிலாப்பூரில் நாம் கபாலியைத் தரிசித்து வணங்கி யிருக்கின்றோம். அதே க பா லீ ஸ் வர ோ இக் கோதாவரிக் கரையிலும் கோயில் கொண்டிருக்கிரு.ர். இக்கோயில் செல்ல சில படிகள் ஏ ற வே ண் டு ம். கோயில் வாயிலில் செந்நிறத்தில் ஒரு அனுமாரும் வெள்ளைப் பளிங்கில் ஒரு விநாயகரும் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்கள். இவர்களை வணங்கிய பின்பே கோயிலுள் நுழையவேண்டும். வழக்கமாக எல்லாசிவன் கோவில்களிலும் இருப்பதுபோல் இங்கு நந்திப்பெருமான் இருக்க மாட்டார். பிரம்மாவின் சிரசைக் கிள்ளியதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் நீங்க நந்தியே குருவடிவில் வந்து உபதேசம் செய்தார் என்பதனால் குருவை தனக். கெதிரை படுத்துக்கிடக்கும் கோலத்தில் வைத்துக் கொள்ள சிவன் விரும்பவில்லை போலும். இங்குள்ள கபாலேசுவரரை வணங்கிவிட்டு கோதாவரியைக் கடந்து எதிர் திசைக்கு வந்தால் அங்கு ஒரு விட்டோபா கோயில். பண்டரிபுரத்தில் இருந்த விட்டோபா இங்கு எழுந்தருளியிருப்பதன் காரணம் என்ன என்பதை அறிய விரும்புவோம். ஆம். இந்த விட்டோபா என்னும் பாண்டுரங்கன்பண்டரிபுரத்தை விட்டு வெளியே வர விருப்பம் இல்லாதவன் என்பதை ஹம்பி யிலேயே பார்த்திருக்கின்றோம். அந்த விஜயநகரத்து. மன்னன் கிருஷ்ணதேவராயன் ஒர் அழகிய கோயிலைக் கட்டி அதில் விட்டோபாவை இருத்திவிட எண்ணினான் என்பதும், இந்த விட்டோபா அங்கு செல்ல மறுத்து விட் டார் என்பதையும் முன்னரே அறிந்திருக்கிறோம். அந்த விட்டோபாஅங்கு மாத்திரம் எப்படிவந்தார் என்றுகேட்கத் தோன்றும் நமக்கு. அதற்கு ஒரு கதையையும் கேட்கலாம். பஞ்சவடியில் இரு ந் த விசுவநாத சர்மா என்பவர் யாத்திரிகர்கள் பலருடன் பண்டரிபுரம் சென்று பாண்டுரங் கனைத் தரிசிக்க விரும்பியிருக்கிறார். முதுமை காரணமாக உடலில் தளர்ச்சி தோன்றிவிட துவங்கிய பயணத்தை தொடர்ந்து நடத்த சக்தி அற்றவராக இருந்திருக்கிறார். என்றாலும், பண்டரிநாதனும் விட்டோபாவைக் காணும்