பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 வரை உண்ணேன், உறங்கேன் என்று சபதம் செய்திருக் கிறார். அன்பன் ஒருவன் பட்டினிக் கிடக்கின்றானே என்று அறிந்த விட்டோபா அந்த அன்பனுக்குத் தரிசனம் கொடுக்க. பஞ்சவடிக்கே ஒடி வந்திருக்கிறார். வந்தவர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருந்திருக்கிறார், நமக்கும் தரிசனம் கொடுக்க. பக்தர்கள் இறைவன் இருக்கும் இடம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இறைவனே அவர்கள் இருக்கும் இடம்தேடி ஓடி வந்துவிடுவான். கைலைகாண விரும்பிய அப்பருக்கு ஐயாற்றிலேயே கைலையைக் காணவகை செய்ய வில்லையா அந்தக் கைலாய நாதன்? இந்த விட்டோபா வையும் வணங்கி விட்டுத் திரும்பவும் கோதாவரியின் மறு கரைக்குச் சென்று மற்ற கோயில்களையும் பார்க்கலாம். கபாலீசுவரர் கோயிலைப் போல் பெரியதொரு கோயில்தான் காளேராமர் கோயில். அஞ்சன மேனியனான ராமனையே காளே ராமர், கறுத்த ராமர் என்று அழைத்து இருக்கிறார்கள். நல்ல மதில்களோடு கூடிய கோயில் அது. கருவறையில் நல்ல கறுப்புச் சலவைக்கல்வில், ராமர், சீதை: லக்ஷ்மணன் மூவரும் இருக்கிறார்கள். அல்லையாண்டு அமைந்த மேனி அழகன் ராமன் மாத்திரம் இல்லை. சிவந்த மேனியையுடைய சீதையுமே, இங்கே அல்லை யாண்டு அமைந்த அழகியாகத்தான் இருக்கிறாள். இக் கோயிலின் சபாமண்டபம் மிகப்பெரியது. 75-நீளமும் 32 அகலமும் உடையது. நாற்பது தூண்கள் அதைத் தாங்கி நிற்கின்றன. இக்கோயில் கட்ட பன்னிரண்டு வருஷம் பிடித்தது என்றும், பத்து லட்சம் ரூபாய் செலவு ஆயிற்று என்றும் சொல்கிறார்கள். இங்கு நிவேதனத்திற்கு மஞ்சள், குங்குமம், எள், சர்க்கரைதான் பக்தர்கள் எடுத்துச் செல் கிறார்கள். எள்ளுருண்டையை உண்டு கொண்டே ராம, லட்சுமண, சீதை பஞ்சவடியில் காலங்களித்தார்கள் போலும். z o இந்த ராமர் கோயிலுக்கு அருகில்தான் பஞ்சவடி என்று அத்தலத்திற்குப் பெயர்வரக் காரணமாக இருந்த