பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஐந்து ஆலமரங்கள் இருக்கின்றன. அதற்குப் பக்கத்திலே தான், சீதா குகையென்னும் குகை இருக்கும். குகை பூமி மட்டத்திற்கும் கீழே இருக்கிறது. 60 அடி நீளமுள்ள படி களில் இறங்கிச் சென்றால் பத்தடி சதுரமுள்ள ஓர் அறை இருக்கிறது. அங்கு ராமர் லக்ஷமணன் சீதை மூவரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் வ ண க் கம் செலுத்திவிட்டு மேல் நடக்கலாம். இந்த பஞ்சவடிக்குப் பக்கத்திலேதான் நாட்டுக் கோட்டை நகரத்தார் மடம் ஒன்றிருக்கிறது. தமிழ் நாட்டு யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான இடம். மேலும் இங்குதான் நாம் தண்டபாணியாம் முருகனைக் காணவும் வணங்கவும் கூடும். மடத்திற்குள்ளேயே சிறு கோயிலாக அமைத்து வைத்திருக்கிறார்கள். இந்த நாசிக் பஞ்சவடியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இரண்டு உண்டு. ஒன்று இரண்டு மைல் தொலைவில் உள்ள தபோவனம். மற்றொன்று ஐந்து மைல் துரத்தில் உள்ள பாண்டவலேணி தபோவனம். கபிலநதி வந்து கோதாவரியுடன் சேரும் இடத்தில் இருக்கிறது. இங்குதான் மாரீசன் பொன்மானாக வந்து இராமனையும் சீதையையும் பிரித்தான் என்கின்றார்கள். ஆ ற் றி ன் நடுவிலே அஷ்டகுண்டம் என்னும் எட்டுக்குழிகள் இருக் கின்றன. அதில் ஒன்றின் பக்கத்திலேதான் இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கைக் கொய்வதுபோல ஒரு சிலை அமைந்திருக்கிறது. சூர்ப்பனகையைப் போலவே அச் சிலையும் அழகானதாயில்லை. கலை அன்பர்கள் சென்று காண வேண்டிய இடம் பாண்டவலேணி என்னும் பஞ்ச பாண்டவர் குகை. மாமல்லபுரத்தில் உள்ள கல் ரதங் களுக்கும் பாண்டவர்களுக்கும் எவ்வளவு தொடர்பு உண்டோ, அவ்வளவு தொடர்புதான் பஞ்சபாண்டவர் களுக்கும் இந்தப் பாண்டவலேணி என்னும் குடைவரை களுக்கும். அடிவானத்திலிருந்து முன்னுாறு அடி உயரத்தில்