பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சீரடி சாயிபாபா மகா பக்த விஜயத்திலே மகாத்மா கபீர்தாஸர் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. கபீர் தாஸர் பிறவி யிலே முசல்மான். ஆனால் ராம பக்தர்களுக்குள் சிறந்த ராம பக்தராக விளங்கியவர். இவரது பாடல்கள் கேட் போரை மெய்மறக்கச் செய்யும் சக்தி வாய்ந்தவை. பாடல்கள் மூலம் பக்தியைப் பரப்பியவர்கள் நமது நாயன் மார்களும் ஆழ்வாரடியார்களும் மாத்திரம் அல்ல கபீர் போன்ற பக்த சிகாமணிகளுமே என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த முஸ்லிம் பக்தர் ராமனிடத்து அத்யந்த பக்தியுடையவராக வாழ்ந்திருக்கிறார். ராமன் என்று வேண்டுமானாலும் சொல், இல்லை ரஹீம் என்று வேண்டு மானாலும் சொல் இறைவன் ஒருவனே என்பதுதான் இவரது சித்தாந்தமாக இருந்திருக்கிறது. ஹரிபோலோ பாயி ஹரி போலோ என்று பாடல் கபீர்தாஸரது பாடல் களிலே பிரசித்தமானது. பஜனை பண்ணும்போது கபீர் தாஸரது பாடல்களைப் பாமரர்களும் பாடி பக்தி மேலீட் டால் மெய் சிலிர்ப்பர் என்பது பலரது அனுபவம். இப்படி முஸ்லீமாகப் பிறந்து, ராம பக்தியில் திளைக்கும் ஒரு மகாத்மாவை பக்த விஜயத்தில் மாத்திரம்தான் பார்க் கிறோம் என்றில்லை. இந்த நூற்றாண்டிலும் நம்மிடையே உலவி முஸ்லிம் இந்து என்ற வேற்றுமைகளை எல்லாம் களைந்து எறிவது, எல்லோரையும் நல்லவர்களாக்கி அவர் களுக்கு எல்லாம் நல்வாழ்வு தந்தவராகவும் வாழ்ந்திருக் கிறார் ஒருவர். அவரே சாயிபாபா என்ற மகாத்மா. அவர் ஒரு முஸ்லிம் பக்கிரியால் வளர்க்கப்பட்டிருந்தாலும், இன்று.அவரை எண்ணிறந்த இந்துக்கள் தெய்வமாகவே போற்றி வழிபடுகின்றனர். அப்படி வழிபடுவதால் நோய் நீங்குகின்றனர். துன்பம் தவிர்க்கின்றனர். இன்னும்