பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 அழைத்துச் சென்றிருக்கிருர். பல வருஷ காலம் இந்த முகம்மதிய பக்கிரியால் வளர்க்கப்பட்டிருக்கிறார் பாபா. பத்திரி உயிர் நீத்தபோது, பாபாவை சேலூரிலிருந்த கோபால்ராவ் தேஷ்முக் என்ற பெரியாரிடம் ஒப்படைத் திருக்கிறார். அப்பெரியாரோ வட வேங்கடவரான, திருப்பதி வேங்கடேசனின் அத்யந்த பக்தர். அப்பெரியார் கிடமே பாபா பத்து வருஷ காலம் தங்கியிருந்திருக்கிறார். இக்காலத்தில்தான் அவர் வேங்கடவனது அருளுக்கு ஆளாகியிருந்திருக்கிறார். இங்கிருந்துதான் பாபா தனது கடைசி காலத்தில் சீரடியில் வந்து தங்கியிருக்கிறார். சீரடியில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தங்கி யிருந்திருக்கிறார். சீரடிக்கு வந்து சில வருஷ காலம் ஒரு வேப்பமரத்தடியிலேயே தங்கி வாழ்ந்திருக்கிறார். அங்கேயே அவர் நிலையாக இருக்கவும் இல்லை. அடிக்கடி ஊர் சுற்றும் பக்கிரியாக அலைந்து திரிந்து இருக்கிறார். இப்படி ஊர் சுற்றித் திரும்பியபொழுது ஒருநாள் சீரடியில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது அக்கோயில் நிர்வாகியாயிருந்தவர் பாபாவின் நடை உடையெல்லாம் மகம்மதிய பக்கிரியைப் போலிருப்பதால், அவரை கோயிலுள்விட மறுத்துவிட்டார். ஆகவே இப்படிக் கோயிலில் இருந்து துரத்தப்பட்ட பாபா, பக்கத்தில் இடிந்து கிடந்த ஒரு பழைய மசூதிக்குள் நுழைந்து அதையே தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டிருக்கிறார். அதன் பின் எங்கு சுற்றினாலும் இந்த மசூதியில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மசூதிக்கு வெளியில் கிடந்த ஒரு பெரிய பாறை மீது பலமணி நேரம் இருந்து, தியானித்துக்கொண்டிருப்பாராம். சில சமயம் பழைய வேப்பமரத்தை நாடி அதன் அடியில் உட்கார்ந்திருப் பாராம். முஸ்லீம்கள் சொல்லும் நமாஸ் என்னும் பிரார்த்தனையையும், செய்வாராம். எல்லாவற்றையும் விட தான் வசித்த மசூதியில் விளக்கு ஒன்றை ஏற்றி அதனை அணைந்து போகாமல் நந்தா விளக்காக பரா