பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நடந்தன. முதலில் இப்படி தத்தமக்கு ஏற்பட்ட குறை களை நிவர்த்திக்கவே மக்கள் பாபாவை வந்து கண்டனர். நாளடைவில் பாபாவை பக்தர்கள் ஆத்ம திருப்தியும் கடவுளை அறியும் அறிவும், அவர் தாள் அடைதலில் உள்ள ஆனந்த அனுபவமும் பெறலாயினர். எவர் எதை விரும்புகிறார்களோ அதையே அவர்களுக்கு நான் அளிக் கிறேன். ஆனால் அவர்களாகவே நான் எதைக் கொடுக்க விரும்புவேனோ அதையே கேட்கிறார்கள். என்று பாபாவே பலதடவை சொல்லியிருக்கிறார், இன்னும் பாபாவைக் கண்டு அருள் பெற்றவர்கள் எல்லாம் பாபாவின் கருணை நோக்கைப் பற்றி விரிவாகக் கூறுகின்ற னர். பாபாவின் கண்கள் தீக்ஷண்யமானவை. அவரது கண் களை ஒருவரால் நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருத்தல் இயலாது.அவரதுபார்வை நமது உள்ளத்தை ஊடுருவி நாம் எண்ணுவன எல்லாம் அறியும் ஆற்றல் உடையது. நாம் முன் செய்த காரியங்கள், இன்று செய்கின்ற காரியங்கள், நாளைச் செய்ய நினைக்கும் காரியங்கள் எல்லாவற்றையுமே உணரும் ஆற்றல் பெற்றவர். ஆதலால் அவரிடம் சரணாகதி அடைவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பலப் பல. நமக்கு வேண்டுவன எல்லாவற்றையுமே அவரே கவனித்துக் கொள்வார்’ என்று பூரீமதி மானேஜர் என்ற பக்தை கூறுகிறார். பா பா வி ன் தரிசன மகிமை பினாலேயே பல வருஷ காலம் தீராத நோயால் துன்பப்படுபவர்கள் எ ல் லாம் நோய் நீங்கி சுகம் பெறுகின்றனர். இத்தனைக்கும் அவர் தான் வளர்த்த அக்னியிலிருந்து கொஞ்சம் உத்தி அதாவது சாம்பலைத் தவிர வேறு மருந்தே கொடுப்பதில்லை. இன்னும் சீரடிக்கு வந்து தரிசனம் செய்துதான் நோய் நீங்கவேண்டும் என்ப தில்லை. இருந்த இடத்திலிருந்தே பாபாவை நோக்கிப் பிரார்த்தனை செய்து நோய் நீங்கியவர்களும் உண்டு. உடற் பிணிகளை மட்டும்தான் அவர் போக்குகிறார் என் றில்லை. பரீட்சையில் பாசாகவேண்டுமா? வேலைகிடைக்க வேண்டுமா, வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமா?