பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் பல பழம்பெருமை உடையவை. ஒரு சில அழிந்து போய்விட்டன. சில சிதைந்தும் கிடக்கின்றன. இவைகளில் பல பெரிய நகரங் களில் இருந்தாலும் சின்னஞ் சிறிய ஊர்களில் கூட பலபல கோயில்கள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. கோயில்கள், கருவறை, மண்டபம், வாயில் என அமைந்து கலைச்சிறப்பு இல்லாமல் இருக்கும் என்றாலும், பல கோயில்கள் சிறந்த வேலைப்பாடுடைய கலைக்கோயில் களாகவும் சரித்திரப்பிரசித்தி, புராணப் பிரசித்தி உடையவைகளாகவும் இருக்கின்றன. இது தவிர இக்கோயில்கள் நாளும் வளர்ந்து தமிழர்களது கலை உணர்வுக்கு சான்று பகர்கின்றவையாகவும் அமைந் துள்ளன. தமிழ் நாட்டுக் கோயில்கள் எல்லாம் திராவிட சிற்ப முறைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன என்பர். பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர்கள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு கோயில்களைக் கட்டினார்களோஎன்று எண்ணும்படியாகப் பல பல கோயில்களைக் கட்டியிருக்கின்றனர். முன்னர் கட்டிய கோயில்களை விரிவுபடுத்தியிருக் கின்றனர். வழிபாடு இயற்றியிருக்கின்றனர். வழிபாடுகள் ஒழுங்காக நடைபெற நிவந்தங்கள் ஏற்படுத்தியிருக் கின்றனர். மாமல்லபுரத்துக் குடைவரைகளும் கற்கோயில் களும் காஞ்சி. கைலாசநாதர் கோயில் வைகுண்டப் பெருமாள் கோயில்களும் பல்லவரது கலை ஆர்வத்தை விளக்கப் போதியதாகும். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழிச்சுரமும் பிறவும் சோழ மன்னர் களது புகழைப் பறைசாற்றும். நெல்வேலி நாதர் கோயி லும், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும் பாண்டியர் கலைப்பணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மிளிரும், மதுரை மீனாட்சி கோயிலும் இராமேஸ்வரத்துப் பிரகாரங்களும், கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்களும் நாயக்க மன்னரது புகழை என்றும் நிலை நிறுத்தும் தன்மை