பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 திருமணம் நடை பெற வேண்டுமா இன்னும் இதுபோன்ற எத்தனையோ காரியங்கள் எல்லாம் பாபாவை பிரார்த்திப் பதின் மூலம் நிறைவேறி இருக்கிறது என்பது பாபா பக்தர்களது நம்பிக்கை. ஆம், நானிருக்க பயமேன்! என்பது தானே அவரது தாரக மந்திரமாக இருக்கிறது. அத்தனை நம்பிக்கையோடு அணுகுகிறவர்களுக்கு அவரது அருள் காக்கிறது. இன்பம் பெருகுகிறது. இந்த சாயிபாபா 1918-ல் சீரடியில் சமாதி ஆகியிருக் கிறார். அவரது உடலைசமாதியில் வைத்து அச்சமாதியின் பேரிலேயே கோயில் கட்டியிருக்கிறார்கள், அக்கோயிலே இந்துக்களுக்கு காசியாகவும், மகம்மதியர்களுக்கு மெக்கா வாகவும் இருந்து வருகிறது. கோயில் பெரிய பங்களா போல இரண்டு அடுக்கு மாடியுடன் விளங்குகிறது. கோயி லைச் சுற்றியும் பல கட்டடங்கள்க் கட்டி, வருபவர்கள் தங்க வசதி செய்திருக்கின்றனர். முதற்கட்டில்தான் அவருடைய சமாதிக் கோயில் இருக்கிறது. அங்கு சலவைக் கல்லில் அவரது உருவத்தைச் சமைத்து வைத்திருக் கின்றனர். அங்குதான் காலை 5 மணிக்கே ஆராதனை நடக்கிறது. பஜனைப் பாடிக் கொண்டேதான் ஆராதனை நடக்கிறது. அந்தக் கட்டிலேயே ஒரு கண்ணாடி அறை யில் அவர் உபயோகித்த பாதுகை, ஆடை முதலியவை களைப் பத்திரப் படுத்தி, வருபவர்கள் காண்பதற்கு வசதி செய்திருக்கிறார்கள். கோயிலை ஒரு சிறு சிகரம் அணி செய்கிறது. கோயிலுக்கு கீழ்ப் புறத்தில் அவர் தங்கியிருந்த மசூதி யில் அவருடைய படமும் அவர் யாசித்து வைத்தகோதுமை யும் வைத்திருக்கின்றார்கள். அவர் மூட்டிய அக்கினியை யும் இன்றுவரை அணையவிடாமல் பாதுகாத்து வருகிறார் கள். கோவிலுக்கு மேல் புறத்தில் அவர் தங்கியிருந்த வேப்பமரம் இருக்கிறது. அதனைச் சுற்றி ஒரு பளிங்குக்கல் மேடை கட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு சிவலிங்கமும் திரு. நந்தி தேவரும் அமைத்திருக்கிறார்கன். அந்த