பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வேப்ப மரத்தின் இலை கசப்பாக இல்லை. சிறிதே துவர்ப்பு உடையதாக இருக்கிறது. அந்த இடத்தைச் சுற்றியுள்ள அறைகளிலே பல சந்நியாசிகள் இருக்கின்றனர். அவர் களுக்கு எல்லாம் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் சாயிபாபாவின் திரு வுருவப்படம் ஒன்றைப் பல்லக்கில் வைத்து உலா வரச் செய்கின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த உலாவில் கலந்து கொள்கின்றனர். இத்தனை சொல்கிறீர்களே, பாபா இந்துவா, இல்லை முகம்மதியரா என்று திட்டவட்டமாகச் சொல்ல வில்லையே என்று நீங்கள் முணு முனுப்பது என் காதில் கேட்கிறது. முன்னமேயே சொல்லியிருக்கின்றேன். இந்து அந்தணர் குடும்பத்தில் அவர் பிறந்திருக்கிறார். மகம் மதியப் பக்கிரி ஒருவரால் வளர்க்கப்பட்டிருக்கிறார். திருப்பதி வேங்கடேசர் அருளுக்குப் பாத்திரமான ஒரு பெரியவரோடு வாழ்ந்திருக்கிறார். தாடியும் மீசையும் கொண்டவராய் முக்காடிட்டுக் கொள்ளும் வழக்கமுடைய வராய் இருந்த காரணத்தால் அவர் மகம்மதியப் பக்கிரி யாகத் தோன்றினாலும், உள்ளத்தால் அவர் மதங்களுக் கெல்லாம் அப்பாற்பட்ட பரம ஞானியாகவே அவர் வாழ்ந் திருக்கிறார். தன்னை அறிந்து இன்புற்று தானும் சிவமும் வேறல்ல என்று உணர்ந்தவராகி ஜாதியும் மதமும் பாராட்டாது வாழ்ந்திருக்கிருர், பாபா தன்னிடம் வரும் பக்தர்களை எல்லாம் அவரவர் மதக் கொள்கையின் படியே நடக்கச் சொன்னாரே அன்றி, உலகில் இந்த மதம் தான் உயர்ந்தது, இது தாழ்ந்தது' என்று ஒரு பொழுதும் சொன்னவரல்ல. தன்னிடம் வரும் இந்துக்களிடம், உங்கள் ராமனைத் துதியுங்கள், உங்கள் முன்னோர்கள் ஆராதித்த விக்கிரகங்களையே ஆராதியுங்கள் என்று கூறி யிருக்கிறார். தன் கையாலேயே வெள்ளிப் பாதுகைகள், காசுகள் படங்கள், முதலியவைகளை எடுத்துக்கொடுத்து அவைகளைப் பூஜை செய்யுமாறு பணித்திருக்கிறார்.