பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 பண்ணுகிற பாவனையில் சிற்பவடிவங்கள் உப்புச உருவில் அர்த்த சித்திரமாக அமைந்திருக்கின்றன. வாயிலுக்கு இரண்டு பெரிய துவாரபாலகர்கள். தஞ்சை ராஜ ராஜன் கட்டிய பெரிய கோயிலில் உள்ள பெரிய துவார பாலகர் களைக் காட்டிலும் பெரிய வடிவங்கள். இம்மட்டோடு இன்னும் இங்கேயே கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் திரிவேணி சங்கமும் சிற்பவடிவமாக உருவாக்கப்பட்டிருக் கின்றன. இக்குடைவரை மேற்கே பார்த்திருக்கிறது. நாம் நமக்கு வலப்புறமாகத் திரும்பி நடக்கலாம். அப்போது தான் அக்கோயிலின் விஸ்தாரமான வெளிப்பிரகாரம் தெரியும். 280 அடி நீளமும் 160 அடி அகலமும் உள்ளது: அப் பிரகாரம். அங்கு அந்த வடக்குப் பிரகாரத்தின் ஆரம்பத்திலும் தெற்குப் பிரகாரத்தின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு யானையும் ஒவ்வொரு துவஜ ஸ்தம்பமும் நிற்கும். துவஜ ஸ்தம்பத்தின் உயரம் 45 அடி. யானைகளின் கால்கள் ஒல்வொன்றும் நமது திருமலை நாயக்கர் மண்ட பத்தில் உள்ள துரண்கள் போல் என்றால் அந்த யானை களின் காத்திரம் என்னவென்று கணக்கிட்டுக் கொள்ள லாம் தானே. அந்த விஸ்தாரமான வெளிப்பிரகாரத் திற்கு நடுவிலேதான் கைலாய நாதர் கோயில் இருக் கிறது. இக்கோயில் சிறிய கோயில் அன்று. 150 அடி நீளமும் 100 அடி அகலமும் 100 அடி உயரமும் உடைய' தாக இருக்கும். இந்தப் பிரதான கோயில் சோழ நாட்டு மாடக் கோயில்களைப் போல 25 அடி உயரமுள்ள மாடத்தின் மேல்தான் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த 25 அடி உயரம் உள்ள மலைச் சுவர்களில் எல்லாம் யானை களும், யாளிகளும், சிங்கங்களும் உருவாயிருக்கின்றன. இன்னும் சுவர்களில் ராமாயணம் முதலிய இதிகாச வரலாறுகள் எல்லாம் சிற்பவடிவங்களாகப் பரிணமிக் கின்றன. கோயிலின் தென்புறச் சுவரின் அடித் தளத்திலே தான் இராவணன் கைலைமலையை அசைத்த கதை சிற்ப மாக அமைந்திருக்கிறது. இக் கைலாய நாதர் கோயில் உருவாக்குவதற்கான மூலக்கற்பனையையே இந்தக் கதை. உதானே தவியிருக்கிறது.