பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கறுத்தவன் கண்சிவந்து கயிலை கன்மலையைக கையால் மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்கு நெறித்தொரு விரலால் ஊன்ற நெடுவரை போல வீழ்ந்தான். என்று அன்று அப்பர் பாடிய கவிதை இங்கே கல்லிலே வடித்த காவியமாக மலர்ந்திருக்கிறது. இங்குள்ள வடிவங் களில் நவரசங்களையுமே சிற்பி வடித்திருக்கிறான். சாந்தத்தையும் விஸ் மயத்தையும் சிவனுடைய வடிவிலே காட்டியவன் அச் சிவனையே அணைத்துக் கொள்ளும் பார்வதியின் வடிவிலே சிருங்காரத்தை பிழிந்திருக்கிறான். ராவணன் விழி பிதுங்கும் நிலையிலே பயங்கரம் பரிணமிக் கிறது. இன்னும் கைலையில் உள்ள கணங்கள் ஒவ்வொன் றுமே ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டுவதாக இருக்கும். இன்னும் மரங்களிலே ஒடி ஒளியும் குரங்குகள், அஞ்சி ஒதுங்கும் சேடிப் பெண்கள் எல்லாம் அங்கு நடக்கும் அந்த அற்புத நாடகத்திற்கு உயிர் ஊட்டுகின்றனர். இச் சிற்ப வடிவில் பல பகுதிகள் சிதைந்திருந்தாலும், அச்சிற்பமெல் லாம் காண்பவர் உள்ளத்தில் ஓர் அற்புதமான உள்ள எழுச்சியையே உருவாக்குகிறது. இச் சிற்ப வடிவின் அழகிலேயே மெய்மறந்து நின்று விடாமல் பக்கங்களில் உள்ள படிகளில் ஏறி மேலே சென்று அங்கு லிங்க உருவில் உருவாகியிருக்கும் கைலாசநாதனை வணங்கலாம், மேலே சென்றதும் நாம் வந்து சேருவது மணிமண்டபம் தான். அம்மண்டபத்தைப் பதினாறு துரண்கள் தாங்கு கின்றன. அதனை அடுத்த கீழ்புறத்திலேதான் கைலாய தாதர் இருக்கும் கருவறை இருக்கிறது. அங்குதான் லிங்க உருவில் கைலாயநாதர் இருக்கிறார். அவர் தஞ்சைப் பெருவுடையாரைப் போல பெரிய ஆகிருதி படைத்தவர் அல்ல. ஏழு எட்டடி உயரமே உள்ளவர். இங்கு அதிசயம் என்னவென்றால், நம் நாட்டுக் கோயில்களில் இருப்பதைப்