பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 போல ஆவுடையார் வட்ட வடிவமாக இல்லை. நல்ல சதுர வடிவிலே ஆவுடையார் அமைந்திருக்கிறது. லிங்கம் என்பது ஆண்குறி என்று வாதமிடுபவர்கள் எல்லாம் இங்கு. வாயடைத்து நிற்க வேண்டியதே. பொங்கழல் உருவமாக இருப்பவனையே லிங்கோத்பவர் என்று குறிப்பிடத் தெரிந்தவர் தமிழர். அவர்கள் வடித்த அரு உருவ வழி பாடே லிங்கத் திருவுரு என்னும் சித்தாந்தம் இந்த எல்லோராக் கைலாயரைக் கண்டால் உறுதிப்படும். கர்ப்பக் கிரகத்திற்கு மேலே விமானம். அது பூமி மட்டத் திலிருந்து 96 அடி உயரம் இருக்கிறது. அதையும் அங் குள்ள சிற்ப வடிவங்களையும் காண வகை செய்து ஒரு சிறிய பிரகாரமே அமைத்திருக்கிறார்கள். இக் கைலாய நாதருக்கு எதிரில் மணி மண்டபத்திற்கும் மேல்புறம் நந்தி மண்டபம். அங்கு நல்ல காத்திரமான நந்தி. அங்கு. சென்று அம்மண்டபத்தின் தென்புற வாயில் வழியாக ஒரு மண்டபத்தின் விதானத்திற்கு வந்தால், அங்கிருந்து கைலாயநாதர் கோயிலின் முழுத்தோற்றத்தையும் காண லாம். புகைப்படம் எடுக்க வசதியான இடமும் அதுதான். அதன் பின் மணி மண்டபத்திற்குத் திரும்பி வந்து அங்கிருந்து வடபுறமாக இறங்கும் படிக்கட்டு வழியாக. இறங்கி வெளிப் பிரகாரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் மண்டபங்களில் நுழைந்து நடந்தால், எண்ணற்ற, சிற்ப வடிவங்களைக் காணலாம். இங்கு நிற்கும்போதுதான் நம் தலைக்கு மேலே கவிந்திருக்கும் கற்பாறையைப்பார்க்கும் போதுதான் இது குடைவரை என்று தெளிவாகத் தெரி யும். மற்றபடி கைலாசநாதர் கோயில் ஏதோ கல்லால் கட்டிய கட்டிடம் போலவே தான் இருக்கும். இந்த மண்ட பங்களில்தான் அர்த்தநாரி, கங்காதரன், திரிபுராந்தகர் முதலிய சிவமூர்த்தங்களும், மகாவிஷ்ணுவின் பல கோலங் களும் ஹரியும் ஹரனும் இணைந்து நிற்கும் கோலத்தையும் காணலாம். இவர்களை எல்லாம் கண்டு நம் வணக்கத்தை செலுத்திவிட்டுத் தென்புறமாக வந்தால் ஓர் அந்தப்புரத் திற்குள்ளேயே வ ந் த து போலிருக்கும். அங்குதான்