பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ராஷ்டிரகூடமன்னனான கிருஷ்ணனது பட்டத்தரசியும் அவளது சேடிகளும் நிற்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு யாகம் நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதால், நாமும் தாராளமாகவே நுழைந்து அவர்களைக் காணலாம். எல்லாம் சரிதான். இக்கோயிலை, குடைவரையை உரு வாக்கிய மன்னன் யார் என்று நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது. இவன்தான் ராஷ்டிரகூட மன்னர் களில் முதலாம் கிருஷ்ணன் என்பவன் என்கிறது சரித்திரம். பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலைப் போலவே இக்குடை வரைக் கோயிலும் அமைக்கப்பட்டது என்றும் கூறுகிறார் கள். இவன் கி. பி. 757-முதல் 783-வரை ஆண்டிருக் கின்றான். இது எல்லாம் சரியான தகவல்கள்தாமா என்று திட்டமாக உரைக்க கல்வெட்டுக்கள் ஒன்றும் இல்லை. இருக்கிற கல்லையெல்லாம் வெட்டி எடுக்கத்தான் நேர மிருந்ததே ஒழிய, அவன் வரலாற்றை எல்லாம் கல்லில் எழுதிவைக்க நேரமிருக்கவில்லை போலும். இனி வெளியே வந்து மேலே நடக்கலாம். என்ன, இன்னும் நடக்கவா அதுவும் இன்றேயா? காலை 9 மணிக்கு இக்குடைவரையில் நுழைந்திருக்கிறோம். வெளியே வரும்போது மாலை 4.30 மணி. இனி கொஞ்ச நேரம்கூட நடக்க முடியாது இன்றைக்கு, ஏதாவது தங்கு மிடம் இருந்தால் சொல்லுங்கள் அங்கு உடலை கிடத்தி விட்டு நாளை மீண்டும் தொடரலாம்' என்று நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன். சரி பக்கத்தில் உள்ள அரசினர் விடுதிக்கே செல்வோம். அங்கு தங்குவோம். கிடைத்த ரொட்டி டீயைச் சாப்பிடுவோம். நாளையும்தான் பார்க்க வேண்டியவை நிறைய இருக்கும் போலிருக்கிறதே. இன் றைக்கு இவ்வளவு போதும்.