பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 பெருவுடையாரைப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அதனால் அந்தப் பெரிய கோயில் ஒரு கலைக்கோயிலாகவே நின்று நிலவுகிறது இன்று வரை. இதைப்போல நீண்டு திமிர்ந்த பெருங்கோயில் வேறு எங்காவது இருக்கிறதா என்று நான் பல இடங்களில் சுற்றியதுண்டு. இப்படி நான் கலை தேடும் கோயில் யாத் திரை செய்த போது ஒரு இடத்தில் ஒரு கோயிலைக் கண்டு அப்படியே அதிசயித்து நின்றிருக்கிறேன். அக்கோயில், அக்கோயிலின் விமானம் எல்லாம் தஞ்சைப் பெரிய கோயிலைப் போலவே இருக்கக் கண்டேன். தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள தகதின மேருவாம் விமானத்தைப் போல இருநூற்றுப் பதினாறு: அடி உயரத்துக்கு அவ்விமானம் உயர்ந்திருக்கவில்லை. என்றாலும், அசப்பில் பெரிய கோயிலைப் போலவே அமைந்திருப்பதைக் கண்டு அப்படியே அதிசயித்து நின்றிருக்கின்றேன். அந்தக் கோயில் தான் எல்லோராவை அடுத்த வேறுள் என்னும் கிராமத்தில் இருக்கும் குஸ்ருனேன் வரர் கோயில். அக் கோயிலைக் காணவே நாம் இன்று வேறுள் என்னும் இடத்திற்குச் செல்கின்றோம். சரிதான், சென்ற வாரம் எல்லோராவில் கைலாசநாதர் குடைவரையை மட்டும் காட்டிவிட்டு, மற்றக் குடைவரை களைப் பிறகு காட்டுகின்றேன் என்று சொன்னரே, அதற் குள் என்ன அனுமானைப்போல வேறுள் நகருக்கு தாவு கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள், தப்புத்தான். முதலில் உங்களை எல்லோராவில் உள்ள மற்ற குடை வரைகளுக்கு அழைத்துச் சென்று விட்டு, அதன்பின்னரே குஸ்ருனேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் செல்லத் திட்டம். * எல்லோராவில் மொத்தம் 34 குடைவரைகள் என் றேனே, ஞாபகம் இருக்கிறதல்லவா? இந்த 34 குடை வரைகளும் ஒர் அர்த்த சந்திரவடிவில் அமைந்த மலை பிலே குடைந்து அமைக்கப்பட்டவைதாம். எல்லாக் 2738-16 - -