பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 குடைவரைகளும் மேற்கு நோக்கிய வண்ணமாகவே அமைந்திருக்கின்றன. இவைகளுக்கு நடு நாயகமாய் மத்தியில் அமைந்திருப்பதுதான் கயிலாயநாதர் கோயில். அதனைப் பதினாறாவது குடைவரை என்று கணக்கு எடுத்திருக்கின்றனர். அதனால் அதற்கு இடப்புறமாக பதினைந்து குடைவரைகள். இதில் 12 குடைவரைகள் பெளத்த சமயச் சார்புடையவை. இவைதாம் எல்லோ ராக் குடைவரையில் காலத்தால் முந்தியவை. அவை எல்லாம் கி. பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டிற்குள் உருவாகி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் கலை விமர்சகர்கள். பெளத்த சமயத்தில் ஹறினயான பெளத்தம், மாகாயான பெளத்தம் என்று இரண்டு பிரிவு உண்டு. ஹீனயான பெளத்தர்கள் புத்தரை வடிவமாக அமைத்து வழிபாடு செய்வதை அனுமதிக்கவில்லை. மகாயானா பெளத்தம் தோன்றிய பின்னரே புத்தரது வடிவங்களை உருவாக்கி வழிபாடு நடத்தி இருக்கிறார்கள். எல்லோராவில் உள்ள குடைவரை களில் பல, மகாயானா பெளத்த காலத்தைச் சேர்ந்தவை தாம். இந்தப் பன்னிரண்டு குடைவரைகளும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே அமைந்தவை. ஆதலால் உங் க ைள அத்தனை குடைவரைகளுக்கும் இழுத்தடிக்கப் போவ தில்லை. இக்குடைவரைகளில் எல்லாம் சிறப்பானது பத்தாவது குடைவரையே. அதையே வி. ஸ் வ. க ர் ம கெளத்தியம் என்கின்றனர். இச்சைத்தியத்தின் வாயிலையே பிரமாதமான அழகுடன் சிற்பி செதுக்கியிருக்கிறான். அதனைப் பார்த்தால் ஏதோ மரத்தில் செய்து ஒண்டித்து வைத்திருக்கும் வேலைதானோ என்று தோன்றும். கல்லில், அதுவும் ஒரு பெரிய மலையைக் குடைந்து அமைத்திருக் கிறார்கள் என்று எண்ணவே முடியாது. அந்த சைத்தியம் இருபத்தாறு அடி அகலமும் 85 அடி நீளமும் 34 அடி உயரமும் உள்ள குடைவரை. அதன் கூறை 50 نیهIL உயரத்தில் கஜப்பிரஷ்ட ஆகிருதி உடையது. இச் சைத் தியத்திற்குள்ளே மத்திய பாகத்தில் 16 அடி உயரத்தில் ஒரு