பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 ஸ்துரபம். அந்த ஸ்தூபத்திற்கு முன்னால் பன்னிரண்டு அடி உயரத்தில் ஒரு புத்த விக்கிரகம். உட்கார்ந்திருக்கும் பாணியில் அதனை உருவாக்கியிருக்கிறார் சிற்பி. போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்ற நிலையில் புத்த பகவான் அங்கேயிருந்து நமக்குக் காட்சித்தருகிறார். விதானங்களில் எல்லாம் கந்தருவர்களும், வித்யாதரர் களும் அந்தச் சைத்தியத்தில் நின்று கொண்டு மெது வாகப் புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி என்று சொன்னால், அந்த ஒலி எதிரொலித்து நம் காதுகளை மாத்திரம் அல்ல நமது உள் ளத் ைத யே பரவசப்படுத்தும். அங்குள்ள புத்த பகவானுக்கு நம் வணக்கத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்து மேல் நடக்கலாம். 34 குடைவரைகளில் இரண்டைத்தானே பார்த்திருக் கின்றோம். இன்னும் எத்தனை குடைவரையைக் காண வேண்டும் என்று உங்கள் உள்ளம் துடிப்பதை அறிவேன். ஆளுல் மற்ற குடைவரைகளையெல்லாம் சென்று காண வேண்டும் என்பதில்லை. நாம் முன்னர் பார்த்த 16-வது 10-வது குடைவரைகளைப் பார்த்ததுபோல 21-வது 29-வது 32-வது குடைவரைகளை மட்டும் பார்த்தால் போதும். இவைகளில் 21-ம் 29-ம் இந்து சமயச் சார்பு டையவை, 30. முதல் 34-வரை ஐந்து குடைவரைகள் சமண சமயச் சார்புடையவை. 21-வது குடைவரையை ராவனேஸ் வரன் குடைவரை என்பார்கள். அடே இது என்ன இந்த ராவணன் நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தொடர்ந்து வருகிறானே என்று எண்ணுவோம். இங்கும் ராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. பார்வதி பயத்தால் மருண்டு பரம சிவனைத் தழுவிக் கொள்வதும், அவளது சேடி வெருண்டு ஒடுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இக்குடைவரை வாயிலிலேயே வடக்குச் சுவரில் கங்கை உருவாகி இருக் கிறாள். காணும் ஆடவர் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவில் கவர்ச்சியான உடல் கட்டுடன்