பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 குங்கும வர்ணத்தில் இல்லை. கோயில், கோயில் கட்டிய கல். எல்லாமே நல்ல சிவப்பு வர்ணத்திலேயே இருக்கிறது. இக் கோயிவின் முன் மண்டபத்தினை நல்ல சிற்ப வேலைகள் அமைந்த துரண்கள் தாங்கி நிற்கின்றன. உருவ அமைப் பிலே தஞ்சைப் பெரிய கோயிலைப்போல இருப்பதாகச் சொன்னேன். இங்குள்ள தூண்களில் செய்திருக்கும் சிற்பு வடிவங்களை சாதாரணமாகத் தேக்குமரத்தில் கூடச் செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. ஆதியில் இக் கோயிலை சுதாமரது மனைவி பக்த கிருஷ்ணாபாய் கட்டி யிருக்கிறாள். ஆதலால் இக்கோயிலை கிருஷ்ணாசுவர்க்க மந்திர் என்றே அந்த வட்டாரத்தில் அழைக்கின்றனர். பின்னர் இக்கோயிலை இந்தோர் ராணி அகல்யாபாய். என்பவர் புதுப்பித்திருக்கிறார். குஸ்ருனேஸ்வரரே மூலவர். அவரது க ரு வ ைற் க் கு ப் பின்புறச் சுவரிலே பார்வதியின் வடிவு இருக்கிறது. அவருக்கு என்று தனிக் கோயில் ஒன்றும் இல்லை. இக்கோயிலுக்கு இரண்டு துவஜ ஸ்தம்பம் இருக்கிறது. இந்த சோதிர்லிங்கத் தரிசனம் செய்து விட்டு மேற்கு நோக்கி ஒரு பர்லாங் நடந்தால் அங்கு. ஒரு சிறு கோயில் இருக்கிறது. அ ங் கு கஜானன மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இக்கோயிலையும். அகல்யாபாய் கட்ட முனைந்தார் என்றும், அதைக் கட்டி முடிக்குமுன்பே அமரநிலை எய்திவிட்டார் என்றும் அங் குள்ளவர்கள் கூறுகிறார்கள். வந்ததே வந்தோம் இன்னும் கொஞ்சம் காலை எட்டிப் போட்டு பரலிக்கும் சென்று வந்து விடலாமே. அங்கும் ஒரு சோதிர்லிங்கம் உண்டு என்று படித்திருக்கின்றோமே! ரயிலில் சென்றால் பார்ப்பஹனி ஸ்டேஷனில் இறங்கி பரவி செல்ல வேண்டும். காரிலேயே சென்றால் தெளலதாபாத். வழியாகச் செல்லலாம். அங்கும் ஓர் அழகான கோயில், கோயில் கட்டிடத்தில் மரவேலைகள் அதிகம். அக் காயிலின் சபாமண்டபத்தில் பனைமரம் அளவு உயர்ந்த துரண்கள். எல்லாம் மரத்தால் ஆனவை. இரண்டு பேரால் கட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு பெரிய காத்திரம்