பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ராஜ்ஜியத்திலே உள்ள கலைக்கோயில்களில் பிரசித்த மானவை ஹோய்சலர் கோயில்களே. சிறந்த கட்டிடக் கலைக்கும், அற்புதச் சிற்பக்கலைக்கும் நிலைக்களனாக விளங்குவன, அக்கோயில்கள், மூன்று கோயில்கள் ஹோய் சலர் கோயில்கள் என்ற பிரசித்தியோடு விளங்குகின்றன. ஒன்று மைசூருக்குக் கிழக்கே உள்ள சோமநாதபுரத்திலே இருக்கிறது. மற்றவை இரண்டும் மைசூருக்கு வடமேற்கே ஐம்பது மைல் தொலைவில் உள்ள பேலூரிலும் ஹளபேடிலும் இருக்கிறது. இம்மூன்று கோயில்களையும் காணும் அவகாசம் இல்லாதவர்கள் பேலூர் சென்னக் கேசவர் கோயிலை மாத்திரமாவது கண்டுவிடவேண்டும், கோயில் சுவர்கள், தூண்கள் ஒரு இடம் விடாமல் சிற்ப வடிவங்களாலேயே நிறைத்து வைக்கப்பட்டிருக்கும். சோழ நாட்டுக் கோயில்களைப் போல பெரிய மாடக் கோயில் களாக அமையாவிட்டாலும் நட்சத்திர வடிவில் ஒர் உயர்ந்த பீடத்தின் மீதே கோயில் எழுந்திருக்கும் கோயில். வாயில்களில் எல்லாம் புலியோடு போரிடும் வீரனை-ஆம், அதுதானே ஹொய்சளர்களின் சரித்திரச் சின்னம் - உருவாக்கியிருப்பார்கள். இன்னும் யானைகள் வேறு கம்பீர மாக எழுந்து நிற்கும். அளவில் சிறியவைகளாக இருப் பதினாலேயே அவை சிற்பம் என்று தோன்றும். கொஞ்சம் பெரிய அளவில் மகாபலிபுரத்து யானை போல் நின்று விட்டால் உண்மையான யானைகள்தாமோ அவை என்றே மயங்குவோம். கோயிலை ஒரு சுற்றுச் சுற்றினால் சுவர் களில் எல்லாம் வரிசை வரிசையாக யானைகள், குதிரைகள் அன்னங்கள், மலர்கள் என்றெல்லாம் செதுக்கி வைத்திருப் பார்கள். ஆனால் இவைகளில் எல்லாம் சிறப்பானவை இச் சுவரின் மேல்தளத்தில் இருக்கும் மதணிகை வடிவங்களே. கிட்டத்தட்ட நாற்பதுக்கு மேற்பட்ட பெண்கள் அங்கே சிலை உருவில் நிற்கின்றனர். இவர்களில் சிலரே தெய்வ் மகளிர். மற்றவர்கள் எல்லாம் சாதாரணப் பெண்களே. எல்லோரும் நல்ல அழகிகள் என்று சொல்லத் தேவை யில்லை. ஏதோ நடனம் ஆடும் நிலையிலேதான்