பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 உள்ளத்தைப் பிளக்கும் கூறிய அம்புகள் அடுக்கடுக்காக இருக்கும். உலகத்து இனிமை எல்லாம் ஒ ன் ற - க உருவெடுத்து நடமாடுவதுபோல நிற்பார்கள் இந்த அஜந்தா பெண்கள். ஆம் சித்திரத்தில் உள்ள பெண்களைக் காணவே அஜந்தாவிற்கு ஒரு நடை போகலாம். சரி இன்று. அந்த அஜந்தாவிற்கே போகிறோம். அஜந்தா பம்பாய்க்கு கிழக்கே இருநூற்று ஐம்பது மைல் தூரத்தில் இருக்கிறது. ரயிலில் செல்பவர்கள் பம்பாயிலிருந்து மண்மாட் சென்று பின்னர் ரயில் மாறி அவுரங்காபாத் சென்றுசேரவேண்டும். அஜந்தாவையும் எல் லோராவையும் பார்ப்பதற்கு வசதியான தங்குமிடம் அவுரங்காபாத்தான், ஜால்சன் என்ற இடத்தில் இறங் கினால் 35 மைல் துரத்தில் அஜந்தா செல்லலாம் என்பர். அது நல்ல வசதியான பாதை அல்ல. அஜந்தா அவுரங்கா பாத்திலிருந்து வடக்கே 67 மைல் தூரத்தில் இருக்கிறது. அவுரங்காபாத்திலிருந்து டாக்சி,கார்கள், இருக்கும்பஸ்வசதி: யும் உண்டு. அவுரங்காபாத்திலிருந்து அறுபது மைல் சென்றதுமே அஜந்தா என்னும் கிராமம் வரும் அது ஒரு சிறிய கிராமம், ஒரு சிறிய குன்றின் மேல் அந்த கிராமம் இருக்கிறது. அங்கிருந்து கார் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கும். வழியெல்லாம் வளைந்து வளைந்து செல்லும். அப்படி ஏழு மைல் சென்றால் அஜந்தா மலை அடிவாரத்திற்கு வந்து சேருவோம். பாதையில் வனாந்திர ஜுவாலை என்னும் மரங்கள் இருக்கும். இலையும் பூவும் சிவந்து அக்காடே தீப் பற்றி எரிவது போலத் தோன்றும். அஜந்தா கிராமத். திலோ, அஜந்தா மலை அடிவாரத்திலோ தங்குவதற்கு வசதியான கட்டிடங்கள் இல்லை. இப்போதுதான் மலை அடிவார்த்தில் ஒரு சுற்றுலா மாளிகை கட்டிக் கொண்டிருக் கிறார்கள். மலையடிவாரத்தில் இறங்கி கிட்டத்தட்ட ஆறு பர்லாங்குமைல் மீது ஏறிச்செல்ல வேண்டும். நல்ல பாதை அமைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஏறுவது சிரமமாக இருக்கிறது. வழி எல்லாம் பாரிஜாத மரங்கள்