பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். நம் நாட்டில் மலரும் பவளமல்லிகையையே பாரிஜாதம் என்கிறார்கள் அங்குள்ள வர்கள் மலைகளும் மரங்களும் மணிக் கற்பாறையும் நிறைந்: திருந்தது அந்தப் பஞ்சவடி என்று பாடுகிறான் கவிச்சக்கர வர்த்தி கம்பன். அந்தப் பஞ்சவடியில் இன்று மரங்கள் இருந்தாலும், மலைகளைக் காணோம். ஆனால் அஜந்தா விலே மணிக் கற்பாறைகள் நிறைய உண்டு. அதிலும் பச்சை நிறமுடைய கற்கள் அதிகம் இருக்கும். இப்படி மலை ஏறும் போதே கிட்டத்தட்ட இருநூறு அடிக்கு கீழே வாகூரா நதி ஒடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மலைமீது ஓடிவந்த நதி ஒரு பெரிய அருவியாக விழுந்து ஓடுகிறது. இந்த இடத் தில் ஏழு இடங்களில் தத்தித்தத்தி விழுவதால் இந்த அருவி யைச் சதகுண்டம் என்கின்றனர். இப்படி ஒடும் வாகூரா நதி இங்கு ஒரு அர்த்த சந்திர வளைவாக ஓடுகிறது. இந்த நதிக் கரையிலே உள்ள மலையைக் குடைந்துதான் குடைவரை அமைத்திருக்கிறார்கள். அக்குடைவரைகளில்தான் சிற்ப வடிவங்களைச் செதுக்கியிருக்கிருர்கள். சித்திரங்கள் எழுதி யிருக்கிறார்கள். இந்தக் குடைவரைகளில் சில இரண்டா யிரம் வருஷங்களுக்கு முன்னமேயே அமைந்தது என்கிறார் கள். பின்னர் இவைஎல்லாம் புதர் மண்டிக்கிடந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மலைக்கு வந்த ஒரு ஆங்கிலேயர்தான் இக்குடைவரைகள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். பின்னர் புதர்களை எல்லாம் நீக்கி, அடைந்து கிடந்த மண்ணையும் வெட்டி எடுத்திருக்கிறார்கள். அ ப் படி க் கண்டுபிடிக்கப்பட்ட குடைவரைகள் 29தான். சமீபத்தில் இன்னும் ஒரு சிறு குடைவரை இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார், ஒரு. புதைபொருள் ஆராய்ச்சியாளர். அதையும் சேர்த்தே. இன்று இருப்பது முப்பது குடைவரை என்று கணக்கிட்டிருக் கிறார்கள். இவைகளில் 9, 10, 19, 26 8 29 எண் குடைவரைகள் எல்லாம் சைத்தியங்கள், மற்றவை எல்லாம் சங்கரமங்கள்