பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 இவைகளையே விகாரங்கள் என்றும் அழைக்கின்றனர். ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அஜந்தா குடைவரைகள் எல்லாம் பெளத்த சமயத்தைச் சார்ந்தவை, சைத்தியங் களில் எல்லாம் புத்தபகவானை வடித்து மக்கள் வணங்க வகை செய்திருக்கிறார்கள். விகாரங்கள் எல்லாம் பெளத்த பிrாக்கள் வந்து தங்க ஏற்பட்ட மடங்கள் போன்றவை. பெளத்த மதத்திலும் இரண்டு பிரிவு இருந்திருக்கிறது. ஹினயான பெளத்தம், மகாயானா பெளத்தம் என்று. ஆதியில் புத்தரை சிலையாக அமைத்து வணங்கிவரவில்லை. பின்னரே புத்தரை சிலைவடிவில் அமைத்து வணங்கி வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் முதலில் வெட்டிச் செதுக்கிய குடைவரைகளில் புத்தர் சிலைவடிவில் இருக்கமாட்டார். 8, 9, 10, 12, 13 8 30 எண் குகைகளே முதலில் அமைக்கப்பட்டவை என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவைகளிலும் காலத்தால் முந்தியது பத்தாம் எண் குடைவரையே. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே அமைக்கப் பட்டிருக்க வேண்டும். மற்றவை எல்லாம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் அமைக்கப்பட்டவை. வட இந்தியாவில் குப்த சாம்ராஜ்யம் உருவாகி இருந்த போது விந்தியத்திற்குத் தெற்கே வகதகர்கள் ஆட்சி நிலைத்திருக்கிறது. வகதக அரசன் ஹரிசேனனின் மந்திரி வராகதேவன் சில குடைவரைகள் அமைத்திருக்கிறார். வகதகர்களின் கீழ் இருந்த அசமகன் என்ற சிற்றரசனும் சில குடைவரைகள் அமைத்தான் என்று சரித்திர ஏடுகள் பேசு கின்றன. இவர்கள் காலத்தில்தான் புத்தரது சிலை வடிவங்கள் செதுக்கப்பட்டு மூல விக்கிரகமாக சைத்தியங் களில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்குடைவரைகளை அமைக்க முதலில் குந்தாலி என்னும் இருப்புக் கோடரியை உபயோகித்திருக்க வேண்டும். பின்னரே உளியும், சுத்தியும் கொண்டு சுவர்கள் அமைத்து சிற்பவடிவங்களை வடித்து உருவாக்கி இருக்க வேண்டும். குடைவரை அமைப்புகளை