பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஒவ்வொருத்தியும் காணப்படுகிறார்கள். இவர்களில் பொட்டிடும் நங்கை, கிளி ஏந்திய பெண், கொடி அடியில் துடங்கும்மடக்கொடி, காதலன் வரவை எதிர் நோக்கி நிற்கும் நங்கை, இன்னும் ஆடையில் தேள் ஒன்றியிருக் கிறது என்று அறிந்து அந்த ஆடையையே உதறிவிட்டு நிற்கும்மங்கை. இப்படி எண்ணற்ற பெண்கள் உயிர் ஒவியங் களாக அங்கே நிற்கின்றனர். எல்லா வடிவங்களிலுமே சிற்பியின் சிற்றுளி வேலையின் நயம் தெரியும். நுணுக்க வேலைப்பாட்டோடு கூடின வடிவங்களாக அவை அமைந் திருக்கும். எத்தனை தரம் இவர்களைச் சுற்றிச் சுற்றி வந் தாலும், திரும்பத் திரும்பக் காணும் வேட்கை தீராது. ஆனால் இந்த மதனிகைகளையும் வெல்லும் அழகியர் அல்லவா கோயிலுக்குள் நிற்கிறார்கள் என்று தெரிந்த பின்னரே நம் கால்கள் கோயிலுக்குள் செல்ல விரையும். கோயிலினுள் இருப்பது நவரங்க மண்டபம். இம்மண்டபம் கட்டிடக் கலையிலே ஒர் அரிய சாதனை. பலதுாண்கள் தாங்கிநிற்கும் இம்மண்டபத்தின் விதானத்திலே ஒரு விரிந்த தாமரை மலர் தொங்கும். குளத்திலே மலர்ந்த தாமரை அல்ல. கல்லிலே மலர்ந்த தாமரைதான் இம்மண்டபத்துத் துரண் ஒன்றில் நரசிம்மரும் இன்னொரு துணில் நாட்டிய சரஸ்வதியும் இருக்கின்றனர். தூண்களில் எல்லாம் பெண்களின் வடிவங்கள். ஆனால் அக்கோயிலைக் கட்டிய சிற்பி ஜக்கண்ணாச்சாரி என்பவன் தன் கைத்திறமையில் அசாத்தியத் திறமை உடையவனாக இருந்திருக்கின் றான். அங்குள்ள தூண்களில் ஒரு துரணில் மட்டும் ஒரு சில இடத்தைக் காலியாக வைத்து விட்டு மற்ற எல்லா இடங் களையும் அலங்காரங்களாலும் சிற்பவடிவங்களாலும் நிறைத்திருக்கின்றான். எதற்காக அந்தச் சிறு இடத்தை மட்டும் ஒதுக்கினான்? தன்னை விட அழகாகவும் அற்புத மாகவும் சிற்ப வடிவங்களை வேறு யாராவது அமைக்க முடியுமா? முடியுமானால் செய்து காட்டட்டுமே" என்றே அந்த இடத்தை மட்டும் ஒதுக்கி, உலகத்தில் உள்ள மற்றச் சிற்பிகளுக்கு எல்லாம் சவால் விட்டிருக்கிறான் என்றே