பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 கிறார். இப்படி ஒரு சித்திரம் தீட்டியதின் காரணமாக கலா ரசிகனான நீலகேசியாம் நாகநந்தி தன்சகோதரனான புலிகேசியின் பேரில் வன்மம் கொண்டு வாதாபியின் அழிவிற்கே வழி கோலினான் என்பர். இச்சித்திரத்தைப் பார்த்ததும், சிவகாமியின் சபதம்’ என்னும் நவீனத்தின் காட்சிகள் பலவும் நம் கண்முன் விரியும். என்ன அஜந்தாவில் பெண்மை அழகு நிரம்பியிருக் கிறது என்று சொன்னீரே அதில் ஒரு கோடியைக் கூட காட்டவில்லையே என்று நீங்கள் முனு.முனுப்பது எனக்கு கேட்கிறது. அஜந்தாவின் அந்தப்புரத்திற்குள் அத்தனை சீக்கிரம் நுழைந்துவிட முடியுமா? சரி ஒருவாரம் காத்திருங் கள். அதன் பின் அஜந்தாவின் அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்கின்றேன். அங்குள்ள அழகிகளையும் காட்டுகிறேன். 2738–17