பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 ஓர் அரசிளங்குமரி என்பதை அவள் தலையில் அணிந்து, உள்ள கிரீடம் சுட்டிக்காட்டுகிறது. அவள் தன் அலங் காரத்தை எல்லாம் முடித்துக்கொண்டு பொட்டிட முனைந்து நிற்பவளாகத் தோன்றுகிறது. இவளைச் சுற்றி நிற்கும் இவள் தோழியர் சாந்து ஏந்தி நிற்கிறார்கள் போலும். இவர்களில் எல்லோருமே கருநிறத்து அழகிகள். எல்லோரும் சேர்ந்து ஒரு சொப்பன உலகத்தையே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கே இன்னும் இங்கேயே ஒரு கந்தருவன் இசைமீட்டிக்கொண்டு விண்ணில் பறந்து செல்கிறான். அவனுடன் செல்கிறார்கள் மூன்று பெண்கள் தாளம் போட்டுக்கொண்டு, இவர்களது தலை அலங்காரம் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது. தன்னை யும் தாங்கலாதார் துகில் ஒன்றும் தாங்கி நின்றார்" என்று கவிச்சக்கரவர்த் தி கம்பன் பாடியதற்கு ஒப்ப விழுந்து சரியும் துகிலையும் தாங்கிக்கொண்டு பறப்பவர்களாகவே தெரி கிறது. இன்றைய சினிமா நடிகையர் எல்லாம் அலங் காரக் கலையில் இப்பெண்களிடம் பிச்சை வாங்க வேண்டும் என்று எண்ணும்படி அத்தகைய கோலா கலமான அ ழ கு ட ன் அவர்கள் விளங்குகிரு.ர்கள். இந்தச் சித்திரங்களிடையேதான் பிம்பிசார மன்னனும் அவனது பட்டத்து அரசியும் கொலுவிருக்கிறார்கள். இன்னும் இங்கேயே சிங்கள நாடாகிய இலங்கைக்கு விஜயன் வரும் காட்சியும் அதை ஒட்டிய ஜாதகக் கதைகளும் உரு வாகி இருக்கின்றன. இந்தப் பெண்களையும், அரசிளங் குமாரர்களையும், குமரிகளையும் காணும் கண்ணாலேயே ஓர் அற்புத சித்திரத்தையும் இங்கே காண்கிறோம். தன் மனைவியான யசோதரையையும், ராகுலனையும் பிரிந்து சென்ற சித்தார்த்தர் திரும்பவும் தன் நாட்டிற்கு வந்து தன் மனைவியிடமே பிச்சை பெறும் காட்சி. மிகப் பெரிய அளவில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ஆம். சிறிய வடிவிலே நிற்கும் யாசோதரை ராகுலன் முன்பு பெரியதொரு வடிவோடு புத்தர் நிற்கிறார், பிச்சை பாத்திரத்துடன், அவர்கள் உள்ளத்திலே அவர் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்