பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 என்று காட்டவே இப்படி ஒரு கற்பனை பண்ணி சித்திரம் தீட்டியிருக்கிறார்கள். இன்னும் எண்ணற்ற சித்திரங்களை யும் தீட்டியிருக்கிறார்கள் இக்குடைவரையிலே. இக்குடை வரைச் சித்திரங்களை பார்த்துக் கொண்டே நிற்கலாம் என்ற எண்ணமே நமக்கு ஏற்படும் என்றாலும், மற்றக் குடைவரைகளையும் பார்த்துவிட்டு சீக்கிரம் ஜாகை திரும்பவேண்டுமே என்ற நினைவிலேதான் நாம் வெளியே வரவேண்டும். இனி நாம் காண வேண்டியது அதிகம் இல்லை. 19-ம் நம்பர் குடைவரை ஒரு சைத்தியம் இருக்கிறதே, அது ஒரு பெரிய அரண்மனை முகப்பு போலவே இருக்கும். அழகான உருட்டுத் தூண்கள் தாங்கும் மண்டபம் ஒன்று முன்னாலே நீண்டு கொண்டிருக்கும். அதற்கு மேலே கிட்டத்தட்ட துவாதசி சந்திரன் வடிவில் ஒரு பெரிய வாயில் இருக்கும் அதைச் சுற்றி எண்ணிறந்த சிற்ப வடிவங்கள் வேறே எல் லாம். ஏதோ செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு இன்றைய கொத்தனார்கள் கட்டியமைத்த கட்டிடமோ என்றே தோன்றும். கூர்ந்து நோக்கினால்தான் அது மலையையே குடைந்து கற்களை வெட்டிச் செதுக்கி அமைத்த குடைவரை என்று காண்போம். இங்கும் வெளிப்புறத்திலேயே ஒரு நாக அரசன். அவன் தலைக்கு மேலே ஏழு தலை நாகம் ஒன்று குடைபிடிக்கும். மன்னன் மனைவியும் அரசன் பக்கத்தில் அந்த அரியனையி லேயே இருப்பாள். இருவரும் ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலை தூக்கிவைத்து ஒய்யாரமாகவே உட்கார்ந் திருப்பர் இருவர் தலையையும் மணிமகுடம் அலங்கரிக்கும். உள்ளே நுழைந்தாலோ எல்லோராவில் கண்ட விஸ்வகர்ம குடைவரை போலவே இருக்கும். வானளாவிய விதானங்கள் அவ்விதானத்தைத் தாங்கி நிற்கும் பிரம்மாண்டமான தூண்கள் எல்லாம் கம்பீரமாக இருக்கும். இந்தப் பத்தொன்பதாவது குடைவரையைக் கண்ட பின் இன்னும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்க