பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எண்ணத் தோன்றுகிறது. இக்கோயிலில் மூலமூர்த்தியாக விளங்குபவரே சென்னக் கேசவர். அவரையே விஜய நாராயணர் என்றும் அழைக்கின்றனர். நல்ல கம்பீரமான வடிவினர். இவரது கருவறை வாயிலிலே தசாவதாரக் கோலங்கள் பலவும் உருவாகி இருக்கின்றன. இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சல மன்னனால் கட்டப்பட்டது என்பது வரலாறு. இம்மன்னன் முதலில் சமணராக இருந்து பின்னால் தமிழ் நாட்டிலிருந்து சென்ற ரீமத்ராமானுஜ ரால் வைஷ்ணவனாக்கப்பட்டவன். இவன் மனைவி சாந்தல தேவி சிறந்த சங்கீத விதுரஷியென அறிகிறோம். இருவரும் கலைஉணர்வு நிரம்பியவர்களாக இருந்த தினாலேதான், இத்தனை கலை அழகு நிரம்பிய கோயில் உருவாகியிருக்கிறது அங்கே. இதற்கு அடுத்தபடியாக நான் கண்ட கலைக்கோயில் பாதாமி குடைவரைக் கோயில்களே. எப்படி ஹொப்சலர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பேலூரிலும் ஹளேபேடிலும் கலைக்கோயில்களை உருவாக் கினார்களோ அப்படியே அதற்கும் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே சாளுக்கிய மன்னர்கள் பாதாமியில் நல்ல நல்ல குடைவரைக் கோயில்களை உருவாக்கியிருக் கிறார்கள். ஆம். நமது மாமல்லபுரத்துக்கும் முந்திய குடைவரைகள் அவை என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அக்குடைவரைகள் ஒன்றும் பிரமாதமாகத் தெரியாது. ஆனால் சில படிக் கட்டுகள் ஏறி அக்குடைவரைகளுக்குள் நுழைந்து விட்டோம் என்றால் ஒர் அதிசய உலகத்திற்கு வந்திருக் கிறோம் என்று தோன்றும். அங்குள்ள நான்கு குடைவரை 56ಗ್ಗಿತ್ತು ஒன்று சிவனுக்கும், இரண்டு விஷ்ணுவுக்கும், மற்றொன்று சமணருக்கும் என ஒதுக்கப்பட்டிருக்கும். அங்குள்ள தூண்களும் சிற்ப வடிவங்களும் பெரிய பெரிய அளவிலேதான் இருக்கும். -