பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 அமான ஸ்து பி அசோக சக்கரவர்த்தியால் சாக்கிய முனிவரின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டது எ ன் து ச ரி த் தி ர ஏடுகள் பேசுகின்றன. ஆனால் மற்ற பெளத்த சின்னங்களைப்பற்றியெல்லாம் விரிவான குறிப் புகள் எழுதியிருக்கும் ஹீவான் சுவாங், இந்த சாஞ்சியைப் பற்றி ஒரு குறிப்புமே எழுதிவைக்கவில்லை. என்றாலும் இலங்கை மகாவம்சம் என்னும் பெளத்த நூலில் சில தகவல்கள் இருக்கின்றன. மெளரியச் சக்கரவர்த்தி அசோகர் உஜ்ஜியினியில் ராஜப்பிரதிநிதியாக இருந்து அரசாண்டு வந்த காலத்தில், சாஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள விதிசா நகரத்து வணிகன் ஒருவனது மகளை மணந்திருக் கிறார். அவளிடம் அசோகருக்கு மூன்று பிள்ளைகள் பிறந் திருக்கிறார்கள். அவர்களில் ஒருவனே மகிந்தன். மகிந்தனது தாயே வேதிசகிரி என்னும் இடத்தில் ஒரு புத் தவிகாரம் கட்டி அங்கு வாழ்ந்திருக்கிறாள். இலங்கையில் பெளத்தத் தைப் பரப்பச் சென்ற மகிந்தன் தன் துணைவி தேவியுடன் இந்த வேதிசகிரிக்கு வந்து தன் தாயைக் கண்டு வணங்கி யிருக்கிறார் என்று மகாவம்சம் கூறுகிறது. விதிசா என்று அன்று அழைக்கப்பட்ட பட்டணமே இன்று பில்சா என்று வழங்குகிறது. வேதிசகிரியே சாஞ்சி என்றாகியிருக்க வேண்டும் . சாஞ்சி ஸ்தூபி இருப்பது ஒரு சிறு குன்று. அது பூமி மட்டத்திற்குமேல் 350-அடி உயரம் உள்ளது. ஆம். நம் திரு தீ தணிகை மலையின் அளவினதே. படிவழியாக ஏறி நடந்தாலும், இல்லை காரிலேயே சென்றாலும் மலையின் மேல்தளத்திற்கு வந்து சேரலாம். அ ங் கு ஒரு பரந்த சமவெளியிருக்கிறது. அதில்தான் இந்தப் புகழ்பெற்ற ஸ்து பி கட்டப்பட்டிருக்கிறது. இது வட்டவடிவமாக அமைந்துள்ளது. ஒரு பெரிய பூகோள உருண்டையை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை கவிழ்த்து வைத்திருந் தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இ ந் த ஸ்துரபியின் குறுக்களவு 120 அடி உயரம் 54 அடி,