பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 விதுரபியின் அடிமட்டத்தில் அதைச் சுற்றிப் பிரகாசம் அமைத்திருக்கின்றனர். இப்பிரகாரத்திற்குச் செல்ல படிகள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஸ்துாபியைச் சுற்றி தரைமட்டத்தில் ஒரு சுற்று வழியும் அமைக்கப்பட்டு இருக் கிறது. இந்த வழியைச் சுற்றித்தான் கல்லால் ஆகிய வேலி ஒன்றும் இருக்கிறது. இந்த வேலியின் நான்கு பக்கங்களிலும் நான்கு தோரண வாயில்கள் இருக்கின்றன. தோரண வாயிலின் மூன்று தோரணங்களை இரண்டு துரண்கள் தாங்கி நிற்கின்றன. தோரண வாயில்களின மேல் பகுதியில் குறுக்கு கல் சட்டங்கள் பரப்பி இருக்கிறார்கள். தூண்களின் மேல் பானை யக்ஷணி முதலிய வடிவங்கள் செதுக்கப் படிருக்கின்றன. அவைகளே மேலே உள் ள தோரணங். களைத் தாங்கி நிற்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றன. வாயிலின் மேல் அடுக்கடுக்காக மூன்று தோரணங்கள். எல்லாம் கல்லால் ஆகிய சட்டங்கள். துரண்களிலும், போதிகைகளிலும், தோரணங்களிலும், புத்தர் வாழ்க்கை. வ ர ல ள று ம், ஜாதகக் கதைகளின் நிகழ்ச்சிகளும். ஸ்துாபி, சக்கரம், மரம் முதலிய சின்னங்கள் சிற்பவடிவில் அமைந்திருக்கின்றன, புத்தர் ஞானம் பெற்ற அசோக மரமே மிகுதியும் காணப்படும். அசோக மரம் தளிர்க்கும். காட்சி மிகவும் அழகானது. இந்தத் தோரண வாயில்களின் தலைப்பில்தான் தர்ம சக்கரங்கள் அமைந்திருக்கிருர்கள். அவைகளை அடுத்து சா ம ைர வீ சு ம் யகர்கள். இன்னும் புத்தர், தர்மர், சங்கம் மூன்றையும் குறிக்கும் பெளத்த திரி ரத்னங்களும் இருக்கும். இத்தோரண வாயில் களின் வேலைப்பாடு ஆதி பெளத்த கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன. இத்தோரண வாயில்கள் கி. பி. 35-க்கு பின்னரே அமைக்கப்பட்டவை: என்று கட்டிடக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். . இந்த வாயில்களின் வழியாக நுழைந்தே ஸ்து பியைச் சுற்றிவர வேண்டும். ஸ்தூபி முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டு, மேலே கற்கள் பதித்து ைவ க் கம் பட்டிருக்கின்றது. முன்னரே குறித்தபடி ஸ்து பி அர்த்த