பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 விதிசா நகரமும் அழிந்திருக்கிறது. பில்சா பட்டணம் தோன்றியிருக்கிறது. அவுரங்கசீப் பில்சா பட்டணத்தை பலமுறை தாக்கி அழித்திருக்கிறான். ஆனால் அவன் சாஞ்சியின் மேல் கை வைக்கவே இல்லை. பின்னர் சாஞ்சி கவனிப்பாரற்றுக்காடு மண்டி ஸ்தூபங்கள் எல்லாம் புதையுண்டு கிடந்திருக்கின்றன. 1912-ல்தான் புதை பொருள் ஆராய்ச்சியாளர் காட்டை அழித்து, சாஞ்சி ஸ்துTபங்களை வெளிக் கொணர்ந்திருக்கின்றனர். இந்தப் பணியில் பெரும் பங்கு பெற்றவர் சர் ஜான் மார்ஷண் என்பவர். அவரது பெரு முயற்சியாலேயே சாஞ்சி பழைய நிலையை பெற்றிருக்கிறது. சாஞ்சியில் இன்று சாந்தம் நிலவுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகளை மறந்து அமைதியான இடத்தைத் தேடி வருபவர்கள் சென்று தங்கியிருக்க வசதியான இடம் சாஞ்சி என்று மட்டும் கூறி விட்டால் போதும் அல்லவா? 2738-48