பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 டங்கபுரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார் என்பது வரலாறு. அப்படி அவர் வந்து சேர்ந்த விவரம் ஒரு ரஸ்மான கதை. டங்கபுரம் என்னும் இத்தலத்தில் விஜயசிம்மன் என்பவர் தன் மனைவி கங்காபாயுடன் வசித்து வருகிறார். அவர் சிறந்த விஷ்ணு பக்தர். ராம பக்தியில் திளைத்த காரணமாக ராமதாஸர் என்றே அழைக்கப்படுகிறார். அவர் துவாரகா நாதனான கிருஷ்ண பரமாத்மா வையே தன் வழிபடு தெய்வமாகக் கொண்டவர். ஆண்டுக்கொரு மு ைற ய | வ து து வ | ர ைக. சென்று கண்ணனைக் க ண் டு தொழாவிட்டால் அவரது ஆத்மா திருப்தி அடையாது. தன்கையாலேயே துளசியை வளர்த்து அத்துளசியைக் கொண்டே துவாரக. நாதனை வழிபாடு செய்பவர் அவர். அவருக்கு வயது. எண்பது ஆகிறது. துவாரகையோ டங்கபுரத்திலிருந்து இருநூறு மைலுக்கு அப்பால் இருக்கிறது. போக்குவரத்து. சாதனங்களும் கிடையாது. இந்தத் தள்ளாத வயதில் துவாரகை செல்வது கஷ்டமான காரியமாக இருந்தது. இருந்தாலும் அவர் நியமத்தை விடவில்லை. இவரது கஷ்டத்தை அறிந்த பரந்தாமன், விஜயசிம்மரது கனவில். தோன்றி இனி நீர் துவாரகை வர வேண்டியதில்லை. நாமே டங்கபுரம் வருகிறோம். நாம் அங்கு எழுதந்தருள்வி தற்கு ஒரு வண்டி கொண்டுவாரும் பார்ப்போம்' என்று சொல்கிறார். இதனை செவிமடுத்த விஜயசிம்மர் ஆனந்த பரவசமாகி ஒர் அன்பரிடம் வண்டியும் மாடும் பெற்று மிக்க சிரமத்துடன் துவாரகை சென்று சேர்கிறார். அங்கு ஒரு. பிராமணர் இல்லத்தில் தங்குகிறார். அங்கும் துவாரகா நாதன், தான் அவருடன் கிளம்ப தயாராக இருப்பதாகவும். தன்னை வந்து எடுத்துச் செல்லும்படியும் கனவில் உரைக் கிறார். நள்ளிரவில். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் உறங்கும்போது விஜயசிம்மர் துவாரகைக் கண்ணன் கோயிலுக்குச் செல்கிறார். இவரது கை தொட்ட உடனேயே கதவுகள் எல்லாம் திறந்து கொள்கின்றன. கருவறையில் இருந்த கண்ணனை எடுத்து தன் வண்டியில்