பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 ஏற்றி இரவுக்கிரவே டங்கபுரம் நோக்கிப் பிரயாணம் ஆகிறார், விஜயசிம்மர். என்ன அதிசயமோ, பொழுது புலருமுன் வண்டியும் விஜயசிம்மரும் டங்கபுரம் வந்து சேர்ந்து விடுகின்றனர். துவாரகா நாதனை தன் இல்லத்தி லேயே எழுந்தருளச் .ெ ச ய் து, தானும் தன் மனைவி கங்காபாயும் சேர்ந்து வழிபாடுகள் செய்கின்றனர். துவாரகையில் உள்ள பூ சா ரி கள் காலையில் கோயிலுக்குச் சென்றால் அங்கு துவாரகா நாதனைக் கானோம். விசாரித்ததில் டங்கபுரத்திலிருந்து வந்திருந்த விஜயசிம்மர்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று அறிகிறார்கள். ஆகவே டங்கபுரத்திற்கு அவர்கள் வந்து சேர்கிறார்கள். துவாரகையிலிருந்து அரசாண்ட மன்னனும் விஜயசிம்மரைப்பிடித்து வர தன் சேனாவீரர்களை எல் லாம் அனுப்புகிறார். விஜயசிம்மர் யாது செய்வது என்று தெரியாது மயங்கும்போது, துவாரகாநாதன், நீர் எம்மை பக்கத்தில் உள்ள கோமதி புஷ்கரணியில் போட்டுவிட்டு, யுத்தகளத்திற்குச் செல்லும் அங்கு வரும் புஷ்பக விமானத்தில் ஏறி வைகுண்டம் வந்து நம் திருவடி நிழலில் அமர்ந்திரும் என்று சொல்கிறார். அவர் சொன்னபடியே விஜயசிம்மரும் துவாரகாநாதனை கோமதி புஷ்கரணியில் போட்டு விட்டுப் போர்க்களத்திற்கே செல்கிறார். துவாரகையில் இருந்து வந்தவர்கள் வி ஜ ய சிம்ம ரைக் குத்திக் கொலை செய்து விடுகிருர்கள். அவரது ஆன்மா மட்டும் வைகுண்டம் சென்று சேர்ந்து விடு கின்றது. கங்காபாய் விஜயசிம்மருக்குச் செய்ய வேண்டிய சமக்கடன்களை எல்லாம் செய்கிறார். துவாரகைப் பூசாரிகள் அவரது வீட்டை வந்து வ ைள த் து க் கொண்டபோது துவாரகாநாதன் கோமதி புஷ்கரணியில் கிடப்பதைச் சொல்லி வி டு கி ற ா ர். பூசாரிகளும் மற்றவர்களும் துவாரகாநாதனை வெளிக்கொணர முயல் கின்றனர். அவரோ அங்கிருந்து கிளம்ப மறுத்துவிடுகிறார். கடைசியில் கங்காபாயே அவரை வெளிக் கொணர்கிறார்.