பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 இத்திருக்குளத்தில் நாரை, கூழைக் கடா, வாத்து முதலிய நீர்ப்பறவைகளும் நிறைந்திருக்கும். பக்கத்தில் உள்ள மரங்களில் வெளவால்களும் ஏராளமாக இருக்கின்றன. பறவைகளையோ வெளவால்களையோ, ஒருவரும் சுடுவது மில்லை இம்சிப்பதும் இல்லை. இக் கோமதி புஷ்கரணியின் கரையிலேதான் பகவானை நிறுத்து எடை போட்டிருக்கிறார்கள். அங்கேயே இன்னும் துலாபாரம் நடக்கிறது. ரண்சோட்ஜி கோயிலில் ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் ஏராள மான பக்தர்கள் கூடி வழிபாடு செய்கின்றனர். புரட்டாசி மாதப் பெளர்ணமியை மிகவும் சிறப்பாக கொண்டாடு கின்றனர். இத்தலத்தில் குங்குமப்பூ கலந்த தண்ணிரில் அபிஷேகம் செய்வதே சிறப்பானதாக கருதப்படுகின்றது. இந்த டங்கபுரத்து ரண்சோட்ஜி ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்டவர் அல்ல என்றாலும் திருமங்கை மன்னன் நந்திபுர விண்ணகரத்தினைப் பற்றிப் பாடிய பாசுரம் ஒன்றில் நந்திபுரவிண்ணகரம் என்ற சொல் தொடரை டங்கபுரம் விண்ணகரம் என்று மாற்றிப்பாடு வதும் உண்டு என்று சொல்கிறார்கள். தந்தை மனமுந்து துயர் நந்த இருள் வந்தவிறல் நந்தன் மதலை எந்தை இவன் என்று அமரர் கந்தமலர் கொண்டு தொழ கின்ற நகர்தான் மந்தமுழ வோசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் நந்திபணி செய்த ஊர் டங்கபுரம் விண்ணகரம் கண்ணுமனமே. என்பதே பாடல். தாக்கோரிலிருந்து அக்கினி திக்கில் எட்டுமைல் தூரத்தில் நைஷத வனம் என்று ஓர் வனம் இருக்கிறது. அங்கே ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அவர்