பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. சபர்மதி ஆசிரமம் ஒரு பெரிய நகரம். ஏராளமான நெசவு ஆலைகளை உடைய நகரம். லண்டன் அளவு பெரிய நகரம். பெரிய வியாபாரத் தலமாக விளங்கும் நகரம். எண்ணிறந்த கட்டிடங்களை தன்னகத்தே கொண்ட நகரம் என்றெல் லாம் பெருமையுடையது இன்றைய குஜராத்தின் தலை நகரான அகமதாபாத் நகரம். என்றாலும், இத்தனையும் அந்நகரத்தின் பெருமையை என்றும் நிலைநிறுத்தக் கூடியவை அல்ல. அங்கு மனிதருள் மாணிக்கமான மகாத்மா காந்தி ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு வாழ்ந் தார். அங்குதான் இந்தியா சுதந்திரமடைவதற்கு உரிய வழிகளை வகுத்தார். அங்கிருந்துதான் தண்டியை நோக்கி தன் உப்பு சத்தியாக்கிரகப்போரை நடத்தினார் என்பது தான், அந்நகரத்திற்கு என்றும் நிலைத்த புகழைத் தருவ தாகும் ஆம், அகமதாபாத் நகரத்தின் ஒரு பகுதியாகவே சபர்மதி ஆசிரமம் விளங்குகிறது. சபர்மதி என்ற நதிக் கரையிலே அமைந்த ஆசிரமம் ஆனதால் அதற்கு சபர்மதி: ஆசிரமம் என்று பெயர் விளங்குகிறது. அந்த சபர்மதி ஆச்சிரமத்திற்கும் அதை ஒட்டி புகழ்பெற்று நிற்கும் அகமாதாபாத்திற்குமே செல்கிறோம் நாம் இன்று. அகமதாபாத் செல்ல ஜாம் ஜாம் என்று ரயிலிலேயே செல்லலாம். பம்பாயிலிருந்து பரோ டா சென்று, அங்கிருந்து பாலான்பூர் செல்லும் ரயிலில் ஏறினால் அகமதாபாத் ஸ்டேஷனிலேயே இறங்கலாம். சபர்மதி ஆச்சிரமம் செல்லுமுன் அந்த பிரபலமான அகமதாபாத். நகரத்தையே ஒரு சுற்றுச்சுற்றி விடலாம். இன்று அகமதாபாத் என்று அழைக்கப்படும் நகரத்தின் பழைய பெயர் அசாவல் என்னும் கர்ணாவதி என்றும் இருந்திருக் கிறது. இந்த நகரத்தை புதிய முறையில் நிர்மாணித்தவர்