பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291 சுல்தான் அ க ம த் ஷ ா என்றும், அப்படி அவர் நிர்மாணித்தது கி. பி. 1411-ம் ஆண்டில் என்றும் சரித்திர ஏடுகள் பேசுகின்றன. சுல்தான் அகமத்வு:ா சபர்மதி நதிக் கரையில் வந்து தங்கி இருந்தபோது அவரது வேட்டை. நாய்கள் முயல் கூட்டம் ஒன்றைத் துரத்திச் சென்ற தாகவும், இந்த நகரம் இருக்கும் இடத்தில் அந்த முயல் கூட்டம் வேட்டைநாய்களை எதிர்த்தன என்றும். அதனால் தான் அந்த மண்ணில் ஏதோ சிறப்பு இருக்கிறது என்று தீர்மானித்து அகம்மதுஷா இங்கே இந்நகரை நிர்மாணித். தான் என்றும் ஒரு கதை வழங்குகிறது. இப்படி இங்கு நகரை நிர்மாணிக்கும்படி அவருக்கு ஆலோசனை கூறியவர் அகம்மது சாட்டு கஞ்பக்ஷா என்ற முஸ்லிம் சந்நியாசி என்றும் கூறுவர். அகமதாபாத் ஒரு பெரிய நகரம். கட்டிடக்கலைக்கு சிறப்பு சேர்க்கும் பல கட்டிடங்கள் கொண்டது. இ ந் ந க ர த் ைத 1818-ல் பார்த்த ஸ்ர் தாமஸ் ரோ என்ற ஆங்கிலேயர் இது என்ன லண்டனை விடப் பெரிய நகரமாக இருக்கிறதே என்று அதிசயத்திருக் கிறார். பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் உள்ள நகரங்களில் அழகு வாய்ந்த நகரம் இந்த அகமதாபாத்தே என்று புகழ் பெற்றிருக்கிறது. தாஜ்மகாலைக் கட்டிய மொகலாய மன்னன் ஷாஜகான் மும்தாஜ் மஹாலை, திருமணம் மு. டி. த் த து ம், தேன்நிலவை அனுபவிக்கத் தேர்ந்து எடுத்த இடம் இந்நகரமே என்றும், அவனுடைய தந்தை ஜஹாங்கீர், அவன் காதலி நூர்ஜஹானுடன் அகமதாபாத்தில் உள்ள கங்காரியா ஏரியில் உல்லாசப் படகுப் பயணம் செய்திருக் கிறார் என்றும் சொன்னால் அந்நகர எழிலைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், சர் தாமஸ் ரோ என்ற ஆங்கிலேயன் முதன் முதல் மொகலாய மன்னனைச் சந்தித்து இந்தியாவோடு வியாபாரம் செய்ய அனுமதி வாங்கியதும் இங்கேதான். இந்திய மண்ணில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்த பின்பு அதனை எதிர்த்து, இந்தியாவிற்கு,