பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 நல்ல உயரமான காம்பவுண்டு சுவர் கல்லிலேயே கட்டி யிருக்கிறார்கள். இங்கு நுழைந்து உடனே ஒரு பெரிய மரத்தைப் பார்ப்போம். அதனை இம்லி மரம் என்கின் அறனர். நம் நாட்டு ஆலமரம் போல அகன்று பரந்திருக் கிறது. விழுதுகள் இல்லை. இலையும் சிறிய, இலையாக இருக்கிறது. காந்திஜி முதன் முதல் இப்பக்கம் வந்தபோது இந்த மரத்தின் நிழலில்தான் தங்கியிருக்கிறார். இந்த மரம்தான் அவரை வரவேற்று அவர் உள்ளத்தில் ஒரு ஆசிரமம் நிறுவலாமே என்ற எண்ணத்தை உருவாக்கி யிருக்கிறது. ஆசிரமத்தில் நடந்த பெரிய காரியங்கள் எல்லாம் இந்த மரத்தடியிலேதான் துவங்கியிருக்கின்றன. ஏன் உப்பு சத்தியாக்கிரகம் என்னும் தண்டி யாத்திரையையே இம்மரத்தடியில் நின்றுதான் துவங்கி யிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக ஆசிரமத்தில் புனிதமாகக் கருதப்படும் இடம் இருதய குஞ்ச் என்ற குடில்தான். இது தா ன் ஆசிரமத்தின் இருதயம் போன்றது. ஆரம்பத்தில் அது மடப்பள்ளியாக இருந் திருக்கிறது. அதன்பின் அதனையே தன் வாசஸ்தலமாக கொண்டிருக்கிறார் காந்திஜி. இங்குதான் உலகப் பிரமுகர்கள் எல்லாம் வந்து பாபுஜியைக் கண்டு பேசியிருக் கிறார்கள். இங்குதான் காந்திஜியும் கஸ்தூரிபாவும் இருந்து குடித்தனம் நடத்தியிருக்கிறார்கள். காந்திஜியின் ஞாபகச் சின்னங்கள் பல இங்கு சேகரித்து வைக்கப்பட் டிருக்கின்றன. படங்களும் பல இருக்கின்றன. இதற்கு முன்னுள்ள திறந்த வெளி முற்றத்தில்தான் பாபுஜி இரவு படுப்பாராம். இந்த இடத்தை எல்லாம் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மேலும் நடந்தால், பாபுஜியின் உபாசனா மந்திர் என்ற இடத்திற்கு வருவோம். அங்கு கட்டிடம் ஒன்றும் இருக்கிறது. நாலு சிறு சுவர்களை எழுப்பி வளைத்து வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் கூரை ஒன்றும் கிடையாது. இங்குதான் ஆசிரமவாசிகள் எல்லாம் ஒன்றாகக் கூடி பிரார்த்தனை பண்ணுகிறார்கள் இதன் பக்கத்திலேயே மகன் நிவாஸ் என்ற குடில் இருக்