பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கிறது. முதன் முதல் பாபுவுடன் வந்து தங்கியவர் மகன்லால். இவர்தான் ஆசிரம விவசாயத்தை எல்லாம். கவனித்து வந்திருக்கிறார். அவர் இறந்தவுடனே பாபுஜி இன்று நான் விதவை ஆகிவிட்டேன்" என்று வருந்தினாராம். இதிலிருந்தே அவர் மகன்லாலிடம் எவ்வளவு ஈடுபாடு உடையவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறதல்லவா? மகன்லாலைப் போலவே, காந்திஜியின் ஆசிரம வேலைகளில் எல்லாம் பங்கு பெற்றவர் இமாம் சாஹிப், இவர் தென்ஆப்பிரிக்கா விலிருந்தே காந்திஜியுடன் இந்தியா வந்தவர். அவர் (பெயரால் இமாம் மன்ஜில் என்று ஒரு குடில். மன்ஜீலின் மகளும் குடும்பத்தினரும் இன்னும் அங்கே தங்கியிருந்து ஆசிரமப் பணியில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இதை அடுத்தே ஆனந்த் நிவாஸ், அது பேராசிரியர் பன்சாலி என்பவருக்காக கட்டப்பட்டிருக்கிறது. காந்திஜியின் காரிய தரிசி மகாதேவதேசாய் குடும்பத்துடன் இக்குடிலில்தான் தங்கியிருக்கிறார். காகாசுலேல்கார் இங்கு தங்கியிருந்த போதுதான் அமரராகியிருக்கிறார். . இன்னும் இங்கே ஹரிஜன் கன்யா வித்யாலயம், பிர்லா மந்திர், சேவநிவாஸ் சோமநாத் சத்திராலாய என்னும் ஹாஸ்டல், காதிபந்தர் முதலிய கட்டிடங்கள் இருக் கின்றன. எல்லாம் மண் சுவர்களாலேயே கட்டப்பட்டு கூரை வேயப்பட்டவை. இன்னும் இங்கே விருந்தினர் வந்து தங்க நந்தினி என்று ஒரு கட்டிடம். நந்தினி என்றால் மகிழ்ச்சி தரும் இடம் என்று பொருளாம். உண்மையி லேயே அந்த விருந்தினர் விடுதியில் நின்று சபர்மதி நதி ஒடும் அழகைக் கண்டால் உள்ளத்தில் மகிழ்ச்சி துள்ளும். இதன் பக்கத்திலேயே மீரா குடில் என்று ஒருசிறு கட்டிடம். ஆதியில் இங்குதான் வினோபாஜி தங்கியிருந்திருக்கிறார். பின்னரே காந்தி ஜியின் சிஷ்யையான மீரா பென் தங்கி யிருந்திருக்கிறார். இன்றளவும் மிகவும் சுத்தமாக அந்த இடம் காப்பாற்றப்பட்டு வருவதே அங்கு தங்கியிருந்த ஆத்மாக்களின் பரிசுத்தமான உள்ளத்தை பிரதிபலிக்கும்.