பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 ஆசிரமம் மொத்தம் 321 ஏக்கர், விஸ்தீரணமுள்ள இடத்தில் அமைந்திருக்கிறது. இருதய குஞ்ச், உபாசனா மந்திர், மகன் நிவாஸ் போன்றவைகளே ஆதியில் இருந்த படியே இருக்கின்றனவாம். மற்றவைகளை எல்லாம் திருத்தி அமைத்ததுடன் சேர்த்தும் கட்டியிருக்கிறார்கள். அந்த ஆசிரமத்தில் எனக்கிருந்த பெருங்குறை என்ன என்றால் கட்டிடத்தின் பெயர், அங்கு நடக்கும் பணி என்ன, என்ப தைப் பற்றியெல்லாம் ஆங்கிலத்திலோ அல்லது தேசிய மொழி என்று போற்றப்படும் இந்தியிலோ எழுதி வைக்க வில்லை என்பதுதான். எல்லாவற்றையும் குஜராத்திலேயே எழுதிவைத்திருக்கிறார்கள். காந்திஜிக்கு அ ஞ் ச வி செலுத்துபவர்கள் குஜராத்தியர் மட்டும் அல்ல. ஏன், இந்திய மக்கள் மாத்திரம் அல்ல. உலகத்தின் பல பாகத்தி லிருந்தும் பலர் வருகிறார்கள். வந்து வணங்குகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஆங்கிலத்திலேயே இருத்தல் வேண்டும். மொழிவாரிமாகாணப் பிரிவினையால் மொழி வெறியை வளர்த் திருக்கின்றோமே தவிர தேசிய ஒருமைப் பாட்டை உருவாக்கவில்லை. இந்த ஏக்கத்தோடே தான் நான் ஆசிரமத்திலிருந்தும் .ெ வ ளி ேய வந்தேன். காந்திஜியின் ஆத்மாவுமே என்னுடன் சேர்ந்து ஏங்கி பிருக்கும் என்று எண்ணுகின்றேன். 2738–19