பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 சோமநாதபுரம் செல்ல முதலில் பம்பாயிலிருந்து அகமதாபாத் செல்ல வேண்டும். அங்கிருந்து ராஜ்காட் சென்று ரயில் மாறி வீராவல் என்ற நகரம் செல்ல வேண்டும். அங்கிருந்து கிழக்கே மூன்று மைல் துாரத்தில் சோமநாதபுரம் இருக்கிறது. ஆகாயவிமானத்தில் சென்றால் கேசாட் என்ற விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து முப்பத்துமூன்று மைல் காரிலே செல்ல வேண்டும். பம்பாய்க்கும் வீராவல்லுக்கும் வாரம் ஒருமுறை ஸ்டீமரும் போகும். வடஇந்தியாவைக் காரிலேயே சுற்றுபவர்களாக இருந்தால் நேரே ராஜ்காட் சேரலாம். வழியில் ஜுனாகத் திலும் தங்கி அங்கு பார்க்க வேண்டியவைகளையும் பார்த்துக் கொள்ளலாம். ஜுனாகத் என்றால் பழைய கோட்டை என்று அர்த்தம். கோவை ஜில்லாவில் உள்ள பட்டக்காரரது பழைய கோட்டையில் காளைகள் அதிகம் என்றால்ஜானாகத்தை அடுத்த கிர்னார் மலைக்காடுகளில் சிங்கங்கள் அதிகம், இந்த மிருக இந்திரன்களைக் காண வேண்டுமானால் ஜூனாகத்திலேயே ஒன்றிரண்டு நாட்கள் தங்க வேண்டும். காட்டிற்குள் தக்க துணையுடன் செல்ல வேண்டும். அக்காட்டில் சிங்கங்கள் எல்லாம் ஆட்டிக் குட்டிகள் போல அலைகின்றனவாம். இதற்கெல்லாம் எல் லோருக்கும் அவகாசம் இராது. கலை ஆர்வத்தோடு கலைக் கோயிலைக் காணச் செல்பவர்கள் ஜூனாகத் பக்கத்தில் உள்ள கிர்னார் மலை ஏறி அங்குள்ள சமணக்கோயில் களைக் காண வேண்டும் 500 அடி உயரமே உள்ள மலை யானாலும் ஏறுவது சிரமமாக இருக்கும். அங்குள்ள கோயில்களில் பெரியது நேமிநாதர் கோயில்தான். அது பண்ணிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அக் கோயிலின் முன்புறமுள்ள மைதானம் 200 அடி நீளமும் 150 அடி அகலமும் உள்ளது. கோயிலைச் சுற்றி, பல சுற்றுக் கோயில்கள். கிட்டத்தட்ட எழுபது இருக்கும். நேமிநாதர் இருபத்திரண்டாவது தீர்த்தங்கரர். அவர் வடிவை கருங் கல்லில் அமைத்திருக்கிறார்கள், ஏராளமான நகைகள் அணிவித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் அங்குள்ள