பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கோயில்கள் பதினாறு, தேஜ்பால், வாஸ்துபால் என்ற அமைச்சர்கள் கட்டிய கோயில்கள் அவை. அதில் ஒன்றில் பத்தொன்பதாவது தீர்த்தங்கரர் மல்லிநாதர் இருக்கிறார். இன்னும் அம்பமாதாவிற்கு ஒரு கோயில். புது மணத் தம்பதிகள் இக்கோயிலில் வந்து வணங்கி ஆசி பெறு கின்றனர். பக்கத்தில் உள்ள தாதர் என்ற சிகரத்தில் ஜமால் ஷா என்னும் முஸ்லீம் பக்கிரிக்கு ஒரு மசூதி இருக்கிறது. அங்கு வந்து பிரார்த்திப்பவர்கள் குஷ்ட நோய் நீங்குகிறார்கள், என்கிறார்கள். மலையடிவாரத்திலே தாமோதர் குண்டம் என்று ஒரு குளமும் கோயிலும் இருக் கிறது. அதற்குப் பக்கத்திலேயே கல்விலே அசோகர் பொறித்து வைத்த கட்டளைகள் இருக்கின்றன. எல்லாம் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவைகளை எல்லாம் பார்த்து அங்குள்ள வசதியான, பிரயாணிகள் விடுதியிலும் தங்கிவிட்டு வீராவல் சென்று சேரலாம். வீராவல்லுக்கு கிழக்கே மூன்று மைல் தூரத்திலேதான் சோமநாதபுரம் இருக்கின்றது. பஸ், டோங்கா வசதிகள் எல்லாம் உண்டு. அது மிகச் சிறிய நகரம். தெருக்கள் எல் லாம் அகலமாக இராது. அவற்றை யெல்லாம் கடந்து சோமநாதபுரத்து சோதிர்லிங்கர் கோயிலுக்கு வந்து சேர வேண்டும். சோமநாதபுரத்தை பிரபாச பட்டணம் என்றும் தேவபட்டணம் என்றும் இன்று அழைக்கிறார்கள். கோயில் பெரிய கோயில்தான். அதைச்சுற்றி பெரிய வெளி ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றியே சுற்றுச்சுவர் அமைத்திருக்கின்றனர். அந்தச் சுற்றுச்சுவர் நம் தமிழ் நாட்டுக் கோயில் மதில்களைப் போல கனமாகவோ உயர மாகவோ இராது. இந்த வெளிப் பிரகாரத்திற்குள்ளேயே காரைக் கொண்டு போகலாம். இக்கோயில் மிக மிகப் பழமையான கோயில் என்கின்றனர். உலகம் தோன்றிய பொழுதே இக்கோயிலும் தோன்றியதாம். வேதகாலத் திலும் அதன்பின் மகாபாரதத்திலும் இக்கோயில் பேசப் பட்டிருக்கிறதாம். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர்க்