பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 அங்குள்ள அந்த டோமைத் தாங்கி நிற்பவர்களே வித்யாதர மகளிர். எல்லோரும் நல்ல அழகுவாய்ந்தவர் கள், இதற்குப் பின்னால்தான் கருவறை. கருவறையிலே மூன்றடி உயரத்திலே சோமநாதர் லிங்கத் திருவுருவினராய் இருக்கிறார். ஆதியிலே சோமனால் பிரதிஷ்டைபண்ணப் பட்ட சோதிர்லிங்கம் அத்தளத்திற்கு கீழே நூறு அடி ஆழத்திலே இருக்கிறது என்கிறார்கள். அப்படிப் புதைந்து கிடப்பவரைக் காணவகையில்லை. இனி நாம் இன்று கருவறையிலிருக்கும் சோமநாதரை வணங்கி விட்டு வெளியே வரலாம். சோமநாதருக்குத் துணைவியர் ஒரு வரும் இல்லை. திருஅஞ்சைக்களத்து இறைவனை அம்மை யில்லா அப்பன் என்பார்கள். அவரைப்போலவே சோமநாத புரத்து சோமநாதரும் அம்மையில்லா அப்பனாகவே வாழ் கிறார். - - இப்புதிய கோயிலைக் கட்ட இதுவரை இருபத்தெட்டு லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறதாம். 155 அடி உயரத் தில் கம்பீரமான சிகரம் ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். இன்னும் கோயிலை விரிவாக்க இருபது லட்சத்திற்கு ஒரு திட்டம் உருவாக்கியிருக்கிறார்கள். இக்கோயில் கட்ட கற்கள் எல்லாம் இருபத்தி ஆறு மைலுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து வந்திருக்கிறது. ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இக்கோயில் இருப்பது கடற்கரையிலே. கடல் அலைகள் கோயிலை அரித்து விடாதபடி ஒரு பெரிய கற்சுவர் ஒன்றையும் கட்டிவைத்திருக்கிறார்கள். அந்த சுவருக்கும் கோயிலுக்கும் இடையே ஒரு கல் ஸ்தம்பம் இருக் கிறது. அது பழைய கோயிலின் சின்னமாக நிற்கிறது. பழைய கோயிலில் இடிந்து கிடந்த பகுதியில் உள்ள சிற்ப லடிவங்களை எல்லாம் சேகரித்து, பக்கத்தில் உள்ள தெருவில் ஒரு காட்சிசாலை அமைத்து வைத்திருக் கிறார்கள், பழம்பொருள் ஆராய்ச்சியாளர்கள். அங்கே சென்று சிதைந்து கிடக்கும் சிலை வடிவங்கள் சிலவற்றைக் கண்டு மகிழலாம்.