பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 ஊர் எல்லாம் செல்ல இருக்கின்றோம். இப்படிப் பெரியவர் களின் அவதாரத் தலங்களுக்கெல்லாம் சென்றுவரும் நாம் மாந்தருக்குள் ஒரு தெய்வமாக வாழ்ந்த மகாத்மா காந்தி: யின் ஜனன பூமிக்குச் சென்று வரவேண்டாமா? அதற். காகவே செல்கிறோம் நாம் இன்று போர்பந்தருக்கு: போர்பந்தர் செல்ல முதலில் அகமதாபாத்திலிருந்து ராஜ்காட் செல்ல வேண்டும். அங்கு ரயில் மாறி ஜெட்சலார் செல்ல வேண்டும், திரும்பவும் ரயில் மாறி போர்பந்தர் போய்ச் சேர வேண்டும். தக்க வசதி உடைய வர்கள் எல்லாம் பம்பாயிலிருந்தே வாரம் இரு முறை செல்லும் ஆகாய விமானத்தில் செல்லலாம். வடநாட்டு: யாத்திரையை காரிலேயே செய்பவர்கள் என்றால் ராஜ். காட்டிலிருந்து ஜாம்நகர் சென்று அங்கிருந்து போர் பந்தருக்கு காரிலேயே சென்று சேரலாம். ஜாம்நகர் போர்பந்தர் ரோடு அவ்வளவு வசதியாக இராது. என்றாலும்,ரயிலில் செல்வதை விட காரிலே செல்வதுதான் நல்லது. ஜாம் நகரிலிருந்து பஸ் வசதி உண்டு. போர்பந்தர் சென்றதும் அங்குள்ள வீதிகளும், வீடு களும் ஒரே வரிசையாகவும் நேராகவும் அழகாகவும் அமைந் திருப்பதே நமக்கு முதலில் தென்படும். பழையவீடுகளே காணக் கிடைக்காது. எல்லா வீடுகளுமே மூன்று நான்கு. அடுக்குகளுடன் கூடியதாக இருப்பதால் மிகுந்த செல்வக் செழிப்புள்ள நகரமாகவே தோன்றும். வீதிகளிலும் இரு புறத்தும் நடைபாதையும், நிழல் தரும் மரங்களும் இருப்ப தால் அது ஒரு பூஞ்சோலை நகரமாகவே காணப்படும். போர்பந்தர் ஒரு கடற்கரைப்பட்டினம். ஆதலால் நல்ல. இனிய காற்று எப்போதும் வீசிக்கொண்டே இருக்கிறது. துறைமுகத்தோடு கூடிய நகரம் ஆனதால் வணிக மக்கள் நிறைந்திருக்கின்றனர். வாணிபமும் செழிப்பாக நடக். கிறது. ஆம். நமது மகாத்மா காந்தியும் ஒரு பனியா" வகுப்பைச் சேர்ந்தவர்தானே. பனியா என்றால் வாணிபம்