பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 செய்திருக்கிறது. அவரை மனிதனாக வாழச் செய்திருக் கிறது. இந்திரிய விஷயங்களைத் தியானிக்கிற மனிதனுக்கு அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது குரோதத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது குழப்பத்திலிருந்து நினைவின்மையும் கினைவின்மையிலிருந்து புத்திநாசமும் உண்டாகிறது. புத்திகாசத்தால் மனிதன் அழிந்து போகிறான். என்ற வரிகள் அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்திருக்கின்றன. இதை அவரே அவரது சுயசரிதத்தில் இருபதாவது அத்தி யாயத்தில் தெளிவாகச் சொல்கிறார். இப்படி கீதை சொல்லும் பாதையில் நடந்த காந்திஜியின் அவதாரத் தலத்தில் கீதா மந்திர் ஒன்று கட்டி அதில் கீதாபோதனை களை எழுதி வைத்திருப்பது மிகவும் பொருத்தம் என்று தோன்றுகிறது. இப்படி காந்திஜி பிறந்த தலத்தையும் அங்குள்ள கீர்த்திமந்திர், கீதாமந்திர் எல்லாவற்றையும் தரிசித்தபின் நாமும் மேல் நடக்கலாம். அப்படி நடக்கும்போது, வாழ்க நீ! எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு கின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்து காந்தி மகாத்மா நீ வாழ்க, வாழ்க, என்று பாரதியின் பாட்டைப் பாடிக்கொண்டே நடக் கலாம்.