பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 மற்றொன்று பெளத்தம், இப்படி இருந்தும் சமணத்துடன் சைவத்திற்கு எப்போதும் முரண்பாடு இருந்து வந்திருக் கிறது. தமிழ் நாட்டுச் சைவர்கள் சமண சமயத்தை வெறுத்தனர். வாதில் சமணர்களை வெல்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டனர். அது காரண மாகவே திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழு வேற்றினார் என்றெல்லாம் பெருமையோடு பேசவும் முற் பட்டனர். எல்லாச் சமயங்களும் இறைவனை அடைவதற் குரிய வழிகளையே சொல்கின்றன. எந்த வழியில் சென் றாலும். இறைவனது கருணைப் பெறுவது எளிதானதே என்று எண்ணுகிறவர்கள் நாம். அதிலும் நானோ சைவ வைணவச் சண்டைகளையும் சைவ, வைணவச் சண்டை களையும் சைவ, சமண வேறுபாடுகளையும் அறவே வெறுப் பவன். ஆதலால் எனது வடநாட்டு யாத்திரையில் எல்லாக் கோயில்களுக்கும் சென்றேன். அங்குள்ள தெய்வங்கள் எல்லாவற்றையுமே தொழுது வணங்கினேன். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய புலவர்களில் பலர் சமணர் என்பதை அறிந்த நான் எனது யாத்திரையில் இந்திய நாட்டில் கலை வளர்த்த பெருமையில் சமணர் களுக்கு மிகுந்த பங்கு உண்டு என்பதையுமே உணர்ந்தேன். ஆதலால் சமணருடைய சமயக் கருத்துக்களை அறிவ திலும், அவர்கள் கட்டிய கலைக் கோயில்களைக் காண்ப திலும் ஆர்வமிகுந்தவனாக இருந்தேன். சரவணபெல கோலாவில் உள்ள கோமதேஸ்வரர் சிலை வடிவம் எப்படி வானுற ஓங்கி வளர்ந்திருக்கிறதோ அப்படியே சமண சமயமும் சமணர்கள் வளர்த்த கலைச் செல்வங்களும், என் உள்ளத்தில் ஓங்கி உயர்ந்து கொண்டே போயிற்று. சமண சமயத்தின் ஆதி கர்த்தர் ஜிநன் என்பார்கள். எல்லாக் கருமங்களின்றும். நீங்கி, முடிவிலா அறிவும் இன்பமும் பொருந்தி பரமாத்ம சொரூபனாகி, பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் சம்சார பந்தங்களை எல்லாம் ஜயித்தவனே ஜிநன் என்றும் அறிகிறோம். சர்வஜீவ தயா பரனும் தர்ம ஹிதகாரணனுமான ஜிநனை ஏனைய 2738–20