பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315 நகர் ஒரு பெரிய ஸ்டேஷன். ஆதலால் ரயிலிலேயே சென்று அந்நகரை அடையலாம். பம்பாயிலிருந்து செல்லும் ஆகாய விமானம் மூலமாகவும் இவ்வூர் செல்லலாம். ஜாம்நகர் குஜராத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று. பழைய செளராஷ்டிரா ராஜ்ஜியத்தில் உள்ள பல அரச குடும் பங்கள் தங்கியிருந்த இடம் ஆதலால் கட்டிடங்கள் எல்லாம் பெரிய் பெரிய அரண்மனைகளாகத்தான் இருக்கும். அங்குள்ள பெரிய அரண்மனையைப் பார்க்க வேண்டு மானாலும் முன் கூட்டியே எழுதி ராஜபிரமுகரின் அனுமதி எல்லாம் பெறவேண்டும். நாமெல்லாம் அரண்மனை களையோ அங்குள்ள அந்தப்புரங்களையோ காண வந்த வர்கள் அல்லவே. ஆதலால் அனுமதிக்காக எல்லாம் காலம் கடத்திக்கொண்டு கிடக்க வேண்டாம். நகரத்தின் மத்தியில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது. அந்த ஏரியின் நடுவிலே இரண்டு பெரிய கட்டிடங்கள். ஒன்று கோத்தாக் கோட்டை மன்றொன்று லாகோத்தா கோத்தாக் கோட்டையில் பார்க்க வேண்டியது ஒன்றுமில்லை. பழைய கிணறு ஒன்று இருக்கிறது. அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியாக வாயால் ஊதியே தண்ணிரை வெளியில் கொண்டு வரவேண்டியிருக் கிறது. லாகோத்தா கட்டிடத்தை இன்று ஒரு பெரிய பொருட்காட்சி சாலையாக மாற்றியிருக்கிறார்கள். அங்கு தான் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரை குஜராத்தில் வ ள ர் ந் த கலைப் பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அங்குள்ள சிற்பக் கலைப்பொருட்கள் எல்லாம் பக்கத்தில். உள்ள கும்லி, பச்சாத்தார், டரன்ஸ், சோட்டில்லா பிண்டாரா காந்தவி என்ற கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்று தெரிகிறது. இன்னும் எண்ணிறந்த படங்கள், காசுகள், மட்டாண்டங்கள் எல்லாம் அங்கே இருக்கின்றன. நர்மதை நதிக்கரையில் நாகரிகம் எப்படி வளர்ந்தது என்று ஆராய்ச்சி பண்ணுபவர்களுக்கு இவை பெருந்துணைபுரியும்.