பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317 நிலையிலும் அந்தத் தேன் துளிக்கு தன் நாவை நீட்டு கிறான் மனிதன். என்ன அற்புதமான கற்பனை! சம்சார பந்தத்தில் சிக்குண்டு பல தாக்குதல்களுக்கு உட்படும் மனிதன் எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடும் என்ற நிலையிலும் கூட. சிறு இன்பங்களை அனுபவிக்கத் துடிக் கிறானே! ஆம். பந்த பாசங்களில் சிக்கித் தவிப்பவன் புலன் நுகர்ச்சியை அல்லவா விரும்புகிறான். இறைவனை நோக்கிச் சிந்தையைத் திருப்ப இயலாதவனாக மாண்டு மடிகிறானே என்று மக்களுக்கு அறிவுறுத்தவே மகாவீரர் இப்படி ஒரு கற்பனை பண்ணியிருக்கிறார் அக் கற்பனைக்கு ஓர் உருவம் கொடுத்து சிற்பமாக வடித்து அங்கே நிறுத்தி யிருக்கிறார்கள். இன்னும் இது போன்று மகாவீரர் போதனையை விளக்கும் பல சிற்பங்கள் உண்டு அங்கே. இச்சமணக் கோயிலுக்கு பலப்பல சிகரங்கள். அத் தனையும் அழகுவாய்ந்தவை. உள்ளேயோ பூசை பண்ணு வோர் எல்லாம் வாயைத் துணியால் கட்டிக்கொண்டே சிறு சிறு பணிகளைச் செய்கிறார்கள். ஆண்களை விடப் பெண்களே நிறையக் கோயிலுக்கு வருகிறார்கள். தூய வெள்ளை ஆடை அணிந்து அவர்கள் வந்து வணங்கித் தொழும் காட்சி எல்லோர் மனத்திலும் பக்தியை ஊட்டுவ தாக இருக்கும். நாமும் மெய்மறந்து சாந்தி நாதரையும் நேமிநாதரையும் வணங்குவோம். சோர்வாலி கோயில் ஐந்நூறு வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டது, என்கிறார் கள். ராய்சேஷ, தார்சேஷ என்னும் இரண்டு சகோ தரர்கள் கட்டிய கோயில் அது கட்டிட அமைப்பு, கருவறை யில் தீர்த்தங்கரர் அமைப்பு எல்லாம் ஒன்றுபோலத்தான் இருக்கும். சிறப்பாகச் சொல்லும்படி ஒன்றுக்கொன்று மாறுபட்டிராது. இங்குள்ள மூர்த்திகளை எல்லாம் நான் தரிசிக்கும்போது அருகனைப்பற்றிய ஒரு பழம்பாடல் என் நினைவிற்கு வந்தது. மண்டித் தடுமாறும் வாழ் விழந்தேன் மாதுயரப் பண்டைப் பழவினைநோய்