பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பற்றறுத்தேன்-பிண்டித் திருமாலை முக்குடைக் கீழ் தேவாதி தேவர் பெருமானை யான் அடைந்த பின் என்பதே பாட்டு. ஆம். அந்த ஜிநன் வணங்கிய அருக்கனாம் தேவாதி தேவனை வணங்கி தொழுத மகிழ்ச்சியிலேயே வெளியில் வந்தேன். சமணக் கோயிலின் கட்டிடக்கலை தீர்த்தங்கரரின் வடிவங்கள் எல்லாம் எப்படி அமைந்திருக் கின்றன என்பதையும் தெரிந்து கொண்டேன். இக் கலையின் பூரணப்பொலிவை, இன்னும் சில நாளில் ராஜஸ்தானில் உள்ள ஆபுசிகரத்தில் உ ள் ள அற்புதக் கோயில்களைப் பார்க்கும்போது நெரிந்து கொள்ளலாமே. என்ற நிறைவுடன் மேலே நடந்தேன். எவ்வளவுதான் சர்வ சமயவாதியானாலும் தமிழ. னாகிய எனக்கு, இத்தலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும். கோயில்கள் இல்லையா என்று கேட்கவே தோன்றியது. கடைசியில். அங்கு என்னுடன் வந்து சமண நண்பர் ஒருவர். ஒ: இருக்கிறதே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். ஊருக்குள்ளேயே ஒரு சிறு மண்மேட்டில் ஒரு கோயிலுக்கு. சென்றோம். அதனை புருஷோத்தமன் கோயில் என் றார்கள். அங்கு மகாதேவனாம் சிவனும், புருஷோத்தம. னான விஷ்ணுவும் கோயில் கொண்டிருக்கிறார்கள். கோயில் மிகச்சிறிய கோயில் சமணக்கோயில்களின் நூற்றில் ஒரு பங்குகூட அளவோ அழகோ இல்லாதது. தான். இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்குள்ளேயே கட்டப் பட்ட ச த் தி ய ந | ர | ய ண ன் கோயில் ஒன்றும். அங்கிருக்கிறது. அக்கோயிலில் பிள்ளையார், அனு மார் எல்லோரும் இருக்கிறார்கள். அங்குள்ள இறைவனை பீடுபஜன் மகாதேவர் என்று அழைக்கின்றவர் பிரார்த் தித்துக் கொள்பவர்களின் துக்கத்தை எல்லாம் நிவர்த்தி பண்ணி வைக்கிறாராம் அவர். சுற்றுக் கோயில்களில் லிங்கத் திருவுருவங்கள் பல இருக்கின்றன. காயத்ரி தேவிக்கு