பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி மி க் க சுவையுடைய வெண்பாக்களைக் கொண்டது. அதில் ஒரு பாட்டு. திறம் திறமாய் தாம் துய்க்கும் தீஞ்சுவையை நாடி அறம் திறம்பிப் பாதகர் ஓர் ஐவர்-நறுங் துளவ மாதுவரை யோனே ! மனம் துணையாக் கொண்டு எனனைக் காதுவர் ஐயோ மெய்கலந்து என்று துவாரகாநாதனான கண்ணனிடம் முறையிடுகிறார். சிறப்புடைய துவாரகையில் உ ள் ள பெருமானைக் கூவியழைத்து, 'ஐயனே! எனது ஐம்பொறிகளாகிய பகைவர் என் மனத்தைக் கெடுத்து விதம் விதமாக அனுபவிக்கும் இன்பத்தை நான் விரும்பும்படி வருத்து கிறார்களே, என்னை இக்கொடுமையினின்று காக்க மாட்டாயா?" என்று ஏங்கியிருக்கிறார். இந்தப் பிரார்த் தனை மனிதனாகப் பிறந்த நாமெல்லோருமே செய்ய வேண்டிய பிரார்த்தனைத்தானே. அத்தகைய பிரார்த் தனையைத் தான் துவாரகா நாதனுன கண்ணனை நோக்கிச் செய்திருக்கிறார். இந்தப் பாடலை நான் முன்னரே படித்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அது காரணமாக அந்தத் துவாரகாநாதனைக் காணும் ஆவலை யும் உள்ளத்தில் வளர்த்து வந்திருக்கின்றேன். இந்தத் துவாரகை குஜராத் நாட்டில் மேலைக் கடற் கரையின் ஒரத்தில் உள்ளது என்று ரயில் வே கால அட்டவனை கூறு கிறது. ஆனால் புத்தகங்களில் இது விவாதத்திற்கு உரிய விஷயமாக அல்லவா இருந்திருக்கிறது. குஜராத்தில் ராஜ் கோட்டிற்கு தென்பக்கம் உ ள் ள ஜூனாகத் தான் துவாரகை என்பது ஒரு ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு. ரைவதகூட பர்வதத்தின் அருகே இருந்தது அந்த துவாரகை என்பதே இதற்கு ஆதாரம். ஆனால் இந்த ஆராய்ச்சி யாளர் துவாரகை கடற்கரை ஒ ர ம க இருந்த