பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 பட்டினம் எ ன் று பழைய புராணங்கள் கூறு: கின்றனவே என்பதை மறந்து விட்டார். இன்னும் கோடினாருக்கு அ ரு கி ல் மூலத்துவாரகை என்று ஒர் இடம் இருக்கிறது. போர்பந்தர்க்கும் மியானிக்கும் அருகேயுள்ள மத்வபூர் என்ற பூரீநகர் தான் துவாரகை. என்பது இன்னொரு கட்சியாளர் கொள்கை. இப்படி எல்லாம் பலர் கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகை எது என்று. முடிவு கட்டுவதிலே இடர்பட்டுக் கொண்டிருந்தாலும், பலர் மேலக் கடற்கரை ஓரத்தில் கோமதி நதிக்கரை ஒரமாக இருக்கும் துவாரகையையே, துவாரகை என்று முடிவு கட்டியிருக்கிறார்கள் இந்திய நாட்டின் வட. கோடியில் ஒரு பத்ரி நாராயணனும், கிழக்கே பூரியில் ஒரு ஜகந்நாதனும் நாட்டை காப்பது போல் மேல்க் கோடியில் ஒரு துவாரகநாதனும் இருந்து மக்களைக் காத்து வருகிறார் என்பதே பொருத்தம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆதலால் அந்த துவாரகைக்கே செல்வோம் நாம் இன்று. துவாரகைக்குச் செல்ல நல்ல ரோடு வசதியில்லை. ஏதோ ஜீப் கார் இருந்தால்தான் அங்குள்ள ரோட்டில் முயன்று பார்க்கலால். ஆனால் அகமதாபாத்திலிருந்து ராஜ்காட், ஜாம்நகர் வழியாக நல்ல ரயில்பாதை இருக் கிறது. இரவு பத்து மணிக்கு ராஜ்காட்டில் ரயிலில் ஏறினால் மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் துவாரகை போய்ச் சேர்ந்து விடலாம். ரயிலை விட்டு: இறங்கியதும், பெண்கள் பலர் ஓடி வந்து உங்கள் சாமான் களைக் கேட்பர், என்ன இவர்கள் எல்லாம் கண்ணன் நாட்டில் உள்ள கோபியரோ, இந்த கோபியரை நாடியா கண்ணன் அன்று ஓடினான் என்று எண்ணுவோம். பின்னர் விசாரித்தால் அவர்களே அங்குள்ள போர்ட்டர்கள் என்று தெரிவோம். என்ன கொடுமை, பெண்கள் என்ன என்ன வேலைகள் செய்யலாம் என்ற நியதி இல்லையா. போர்ட்டராகக் கூட வந்து விட்டார்களே. இனி ஜட்கா டோங்கா, வண்டிக்காரர்களாக மாறினாலும் விய,