பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பில்லை தான். அந்தப் பெண் போர்ட்டர்களிடமிருந்து தப்பி டோங்காவில் சாமான்களை ஏற்றிக் கொண்டு ஒன்றரை மைல் சென்றால் துவாரகை வந்து சேரலாம். வசுதேவர், தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்கிறான். தன் மாமனான கம்சனைக் கொல்கிறான். கம்சனின் மனைவி யான அஸ்தியும் பிரஸ்தியும், இதனால் கோபம் கொண்டு தங்கள் தந்தையாகிய ஜராசந்தனை கண்ணனுக்கு எதிராகக் கிளப்பி விடுகிறார்கள். ஜராசந்தனும் மதுரா நகரின் மேல் பதினேழு தடவை படை எடுத்து, அத்தனைப் படை எடுப்பிலும் தோல்வியே அடைகிறான். கடைசியாக பதினெட்டாவது தடவையாகப் போருக்கு வரும் போது, கண்ணன் படையை சேர்ந்த யாதவர்கள் மிகவும் களைத் திருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் மதுஅருந்தி ஒருவரோ டொருவர் சண்டை போட்டு நலிந்தும் இருக்கிறார்கள் ஆதலால் ஜராசந்தன் மதுராவைக் கைப்பற்றிக் கொள் கிறான்.போர் நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை அறிந்த கண்ணன், அண்ணன் பலராமனுடனும் எஞ்சியிருந்த யாதவர்களுடன் மேற்கே பிரயாணம் ஆகி ரைவத கூட பர்வதத்திற்கு வந்து அங்கு துவாரகையை நிர்மாணித்து அங்கிருந்து அரசு புரிந்திருக்கிறான். இப்படித் தான் கண்ணன் கோயில் கொண்டுள்ள துவாரகை உரு வாகியிருக்கிறது. இந்தத் துவாரகை கோமதி நதிகடலோடு கலக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. அங்குதான் பிரபல மான கண்ணன் கோயில் இருக்கிறது. கோயிலுக்குச் செல்லு முன் கோமதி கடலுடன் சங்கம்மாகும் இடம் சென்று நீராடவேண்டும் என்பது நியதி. இந்த கோமதி சங்கமத் திலே பன்னிரண்டு துறைகள் இருக்கின்றன. அவை முறையே ரங்கம்காட், நாராயணன்காட், வசுதேவகாட் காவூகாட், பார்வதிகாட், பாண்டவங்காட், பிர்ம்மகாட், சுரதன்காட், சர்க்காரிகாட், கங்காகாட், அனுமான்காட், நாராயண் பலிகாட் எ ன் று பெயர் பெற்றிருக்