பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 in the world- என்பதே அவர்கள் விமரிசனம். இது மலையின் பக்கத்திலிருந்து குடைந்து செல்லப்பட்டதல்ல. வானுலகில் இருந்து விஸ்வகர்மன் ஒருமலையில் உச்சியில் இறங்கி இருக்கிறான். அவன் இறங்கிய இடத்திலிருந்தே மலையை வெட்டிச் செதுக்கி பூமியின் தளத்திற்கு வந்திருக் கிறான், அதனால் சாரம் கட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றும் இல்லாமலேயே, இக்குடைவரையை உருவாக்கக் குறைந்தது நூறு வ ரு ஷ மா வது ஆகியிருக்க வேண்டும். முன்னுாறு லட்சம் கன அடிக்கற்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இது அரிய சாதனைதான். இக்குடைவரையை உருவாக்க எவ்வளவு கற்பனை, அந்தச் சிற்பியின் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும். இக்குடைவரையில் 150 அடி நீளமும் 100 அடி. அகலமும் உள்ள கோயில் ஒன்றே உருவாகியிருக்கிறது. இது சோழநாட்டு மாடக்கோயிலைப் போல 25 அடி உயர முள்ள ஒரு மாடத்தில் அமைக்கப்பட்டது போல் செதுக்கப் பட்டிருக்கிறது. கோயில் சுவர்களில் எல்லாம் யானைகள்: யாளிகள், சி ங் க ங் க ள் மு. த லி ய சி. ற் ப வடி வங்கள். கோயிலினுள் லிங்க வடிவில் இருப்பவர் தான் கைலாசநாதர். கருவறை, அர்த்தமண்டபம், பிரகாரம் எல்லாம் அமைத்தே கோயிலைச் செதுக்கியிருக் கிறான் சிற்பி. இக்கைலாச நாதரைத்தான் கைலைமலை யோடு பெயர்த்து எறிந்துவிட முனைந்திருக்கிறான் தசகண்ட இராவணன். கைலாச பர்வதம் அசைந்து கொடுத்தபோது பார்வதி அஞ்சி அண்ணலைத் தழுவிக் கொள்கிறாள். அண்ணலோ தன் மோன நிலையைக் கலைக்காமல் பெருவிரலை ஊன்றி யிருக்கிறான். இராவணன் விழி பிதுங்கி நசுக்குண்டிருக்கிறான் என்று ஒரு கற்பனை. இந்தக் கற்பனைக்கு வடிவம் கொடுத்து இக்கோயிலின் அடித்தளத்திலே ஒரு சிற்பம் உருவாகி யிருக்கிறது. மிகச் சிறந்த முறையில் உருவாகியிருக்கும் சிற்பம் அது. அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும் மஞ்சாடு தோள்